கழுகு தன் கூட்டைக் கலைக்கிறது போல (AS THE EAGLE STIRRETH HER NEST) உபாகமம் 32ம் அதிகாரம் 11ம் வசனத்தில் “கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின் மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின் மேல் சுமந்து கொண்டு போகிறது போல” என்று நாம் வாசிக்கிறோம். நான் வெளிப்புறத்தில் சஞ்சரிக்க ஆவல் கொண்டவன் என்னும் முறையில், தேவன் தமது பிள்ளைகளை கழுகுக்கு ஒப்பிடுவது ஏன் என்று நான் அடிக்கடி வியந்ததுண்டு. என் முதல் வேதாகமம் இயற்கையாகும். அதன்மேல் எனக்கு மிகுந்த பிரியம். நீங்கள் தேவனைத் தேடுவீர்களானால், அவரை இயற்கையில் காணலாம். ஏனெனில் அவரே அதை படைத்தவர். அந்த பிரம்மாண்டமான பறவைகளையும், அவைகள் தங்குகின்ற ஸ்தலமாகிய உயர்ந்த மலைகளையும் கண்ட அனுபவம் எனக்குண்டு. மாடுகளை மேய்த்தல், வேட்டை அதிகாரியாக பணியாற்றல், அதன் பிறகு மனம் மாறி இரட்சிக்கப்பட்டு வேதாகமத்தை படித்தல் போன்றவை இந்த அனுபவத்தை என்னை விட்டு அகற்றிவிடவில்லை. எனக்கு வெளிப்புறமும் தேவன் எவ்வாறு தம்முடைய அண்டசராசரங்களில் அசைவாடுகிறார் என்பதை கவனிப்பதும் மிகுந்த ஆவலைத் தருகின்றது. தேவனுடைய பிள்ளைகள் ஒரு பெரிய கழுகுக்கு ஒப்பிடப்படுகின்றனர். பாலஸ்தினாவில் 40 விதமான கழுகுகள் உள்ளதாக நான் படித்திருக்கிறேன். “கழுகு” என்னும் சொல் “அலகினால் ஊட்டும் ஒன்று” என்று பொருள்படும். தேவன் தமது பிள்ளைகளுக்கு எவ்வாறு தமது வாயினால் வார்த்தையை ஊட்டுகின்றார் என்பதற்கு இது ஒரு அழகான எடுத்துக்காட்டு. “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” (மத் 4:4). அவரே தமது கழுகுக் குஞ்சுகளை வார்த்தையினால் போஷிக்கும் கழுகு தேவன் தமது திக்கதரிசிகளை கழுகுக்கு ஒப்பிடுவதை நாம் காணலாம். அது மட்டுமல்ல, தம்மையே அவர் கழுகுக்கு ஒப்பிட்டுக் கொள்கிறார், அவர் யேகோவா கழுகு, நாம் அவருடைய கழுகுக் குஞ்சுகள். அவர் தமது சொந்த வாயினால் நமக்கு ஊட்டுகிறார் அல்லவா? “மனுஷன் அப்பத்தினாலே மாத் திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்”. தேவன் தமது கழுகுக் குஞ்சுகளை தமது வார்த்தையினால், தமது உரைக்கப்பட்ட வார்த்தையினால் போஷிக்கிறார். பல முறை நான் மாட்டு அல்லது கோழி இறைச்சி கொண்ட ஒரு நல்ல விருந்தை உண்டு அதிகம் ருசித்ததுண்டு. ஆனால் ஒரு முறையாவது நான், அவருடைய மேசையில் உண்ட விருந்தைப் போல் எந்த விருந்தையும் உண்டு ருசித்ததில்லை. தேவன் தமது நல்ல வார்த்தையினால் நம்மை போஷிக்க நாம் அனுமதிப்போ மானால், அது நமது வாய்களுக்கும் உள்ளந்திரியங்களுக்கும் அருமையான உணவாக அமையும். இன்றைய சபை ஆவிக்குரிய உணவு கிடைக்காமல் பட்டினி கிடந்து மரித்துக் கொண்டிருக்கிறது என்பது என் கருத்து. இன்றைய ஆவிக்குரிய காலத்தில் கழுகு களின் உணவின் ஸ்தானத்தை எடுத்துக்கொள்ள வேறெதுவுமே கிடையாது. உண்மையான கழுகின் உணவு மட்டுமே போதுமானது. நாம் கழுகுகளானதால், நமக்கு கழுகுகள் உண்ணும் உணவு அவசியமேயன்றி ஒரு சமுதாய கூட்டமோ, அல்லது சபை கட்டிடத் தின் அடித்தளத்தில் உண்ணும் இரவு உணவோ அல்லது பின்னி தைக்கும் (knit-and-sew) விருந்தோ அல்ல. நமக்கு யேகோவா கழுகின் வாயிலிருந்து ஊட்டப்படும் கழுகு உணவே அவசியம். கழுகின் இரு பெரும் செட்டைகள் அதை விடுவித்துக் கொள் வதற்காகவே அளிக்கப்பட்டுள்ளது. அவை பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் கூட எடுத்துக் காட்டாயுள்ளன. கழுகைக் குறித்த மற்றொரு விஷயம் என்னவெனில், அது மற்றெந்த பற வையைக் காட்டிலும் ஆகாயத்தில் மிக அதிக உயரம் பறக்க வல்லது. ஒருவனுக்கு பருந்தைப் போன்ற கண்கள் உள்ளன என்று சொல்லப்படுவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் காணும் திறன் கொண்ட விஷயத்தில் பருந்து ஒரு கற்றுக்குட்டி மட்டுமே. கழுகுக்கு காண முடியும் தூரத்தில் பாதி தூரம் கூட ஒரு பருந்தால் காணமுடியாது. பருந்து கழுகைப் பின்தொடர்ந்து அது பறக்கும் உயரத்துக்குப் பறக்க முயன்றால், அது அழிந்து விடும். எனவே கழுகு மிக உயரத்தில் வாழ்வதற்கென்றே சிறப் பாக படைக்கப்பட்ட பறவையாகும் தேவன் தமது தீர்க்கதரிசிகளை கழுகுகளுக்கு ஒப்பிடுகிறார். நீங்கள் உயரப் பறக்க பறக்க, உங்களால் இன்னும் தொலை தூரம் பார்க்க முடியும். ஆனால் நீங்கள் உயரப் பறந்து, தூரப் பார்வைக் கேற்ற கண்கள் உங்களுக்கு இல்லாமல் போனால், உயரப் பறப்பதனால் எந்த உபயோகமுமில்லை. எனவே தேவன் நம்மை உயரக் கொண்டு செல்லும் போது, தொலை தூரம் காண்பதற்கு வேண்டிய திறனையும் நமக்கு அருளுகிறார். அது எனக்குப் பிரியம். நீங்கள் உயரப் போகப் போக, உங்களால் இன்னும் அதிக தூரம் காண முடிகிறது. நாம் கழுகுக் குஞ்சுகளுக்கு ஒப்பிடப்படுவதால், நாம் கழுகின் வழி சென்று நீலவானத்தில் மிக உயரப் பறப்போம். மிக உயரப் பறக்க முயலும் மற்ற பறவைகளை நீங்கள் கண்டதுண்டா? என்ன நடக்கிறதென்று பாருங்கள். அவை கழுகைப் பின் தொடர்ந்து கழுகைப் போலவே உயரச் செல்கின்றன. ஆனால் அவை உயர அடைந்தவுடன் முறுமுறுக்கத் தொடங்குகின்றன. அவை கழுகு பறத்தலில் பொருந்தவில்லை என்பதை கண்டு கொள்கின்றன. ஒரு பறவை, "என்னால் இதை பொறுக்க முடியாது" என்கின்றது. மற்றொரு பறவை வேறொரு காரணம் கொண்டு முறுமுறுக்கின்றது. அது என்ன? கழுகைப் போன்று உயாப் பறப்பதற்கான உரு வமைப்பு அவைகளுக்கு இல்லை, அதற்காக அவை அழைக்கப் படவுமில்லை. அவை மீண்டும் தங்கள் குளிர்ந்த மரித்துப் போன சபைகளுக்கு பறந்து வந்து பட்டினியால் வாடி சாகின்றன. ஆனால் கழுகு அவ்வாறில்லை. அது மேலும் மேலும் பறந்து கொண்டேயிருக்கும். கழுகு எவ்வாறு காற்றில் அதிக உயரம் எழும்பிச் செலகிறது என்பதை இப்பொழுது கவனியுங்கள். அது தன் பலமுள்ள செட்டைகளை விரித்து மிதந்து செல்கிறது. அது எனக்குப் பிரியம். ஒரு விசுவாசியும் அதை தான் செய்கிறான். அவன் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு ஓடிச்செல்வதில்லை - இந்த வாரம் மெதோ டிஸ்டு உறுப்பினனாகவும், அடுத்த வாரம் பெந்தெகொஸ்தே காரனாகவும், அவன் தன் விசுவாசத்தை தேவன் பேரில் வைத்து, தேவனுடைய அருமையான காற்றில் உயர எழும்பிச் செல்கிறான். நான் கொலராடோவுக்கு வேட்டைக்குச் சென்றிருந்த போது, நான் கண்ட ஒரு அனுபவத்தை உங்களிடத் கூற விரும்புகிறேன். ஒரு நாள் நான் மலையின் உயரத்தில் கடம்பை மானை வேட் டையாடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அது வேட்டை காலத்தின் துவக்கமாயிருந்தது. கடம்பை மான்களை கீழே துரத் துவதற்கு பனி அதிகமாக அப்பொழுது பெய்திருக்கவில்லை. எனவே நான் மரங்களின் வரிசையின் வழியாக உயர செல்ல வேண்டி யதாயிருந்தது. எனக்கு 70 மைல் தூரம் வரைக்கும் எந்த ஒரு நபரும் இருக்கவில்லை. மாட்டு பண்ணை வைத்திருந்தவர் மற்றொரு வழியில் சென்று கொண்டிருந்தார். நாங்கள் இருவரும் நான்கு நாட்கள் கழித்து ஒருவரையொருவர் சந்திப்பதாக தீர்மானிக் கப்பட்டிருந்தது. அன்று காலை நான் என் குதிரையை கட்டி வைத்து விட்டு, பல ஆண்டுகளுக்கு முன்பு நான் மாடுகளை மேய்த் திருந்த அந்த மிக உயரமான இடத்துக்கு சென்றேன். அப்பொழுது திடீரென்று மழை பெய்தது. நான் காற்றினால் சாய்ந்திருந்த ஒரு மரத்தின் பின்னால் ஒதுங்கி நின்றேன். மழை கடந்து சென்றது. சிறிது நேரம் மழை பெய்வதும், சிறிது நேரம் பனி பெய்வதும், சிறிது நேரம் சூரியன் பிரகாசிப்பது மாயிருந்தது. நான் மழையில் சிறிது நனைந்திருந்தேன். எனவே நான் என் முகத்தை துடைத்துக் கொண்டு மரத்தின் பின்னால் ஒதுங்கியிருந்த இடத்திலிருந்து நடந்து சென்றேன். அங்கு நான் வெட்ட வெளியில் நின்று கொண்டிருந்தபோது தூரத்திலிருந்த பள்ளத்தாக்கிலிருந்து ஒரு சத்தத்தைக் கேட்டேன். ஒரு ஓநாய் ஊளையிட்டது. அதற்கு பதில் கூறும் வகையில், அதன் ஜோடி ஊளையிட்டது. தாவீது ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது" என்றான். (சங். 42:7). எனக்கு காடு என்றால் மிகப் பிரியம். அந்த ஓநாய் ஊளையிட்டு அதன் ஜோடி பதிலுக்கு ஊளையிட்டதை நான் கேட்டபொழுது எனக்குள் ஆழமாக இருக்கும் ஏதோ ஒன்று கூப்பிடத் தொடங் கினது. மேற்கு பாகத்தின் அடிவானத்திலிருந்து சூரியன் கற்பாறை களின் வழியாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. அது அஸ்த மனமாகிக் கொண்டிருந்த போது, பனி உறைந்திருந்த பசும் புல்லின் மேல் பிரகாசித்து, ஒரு வானவில் உண்டானது. அப்பொழுது நான் தேடிக் கொண்டிருந்த கடம்பை மான் கூட்டத்தின் சத்தத்தைக் கேட்டேன். தூர இருந்த அந்த அடர்த்தி யான புதரில் ஒரு கடம்பை மான் எக்காள அழைப்பை கொடுத்தது. ஓ . நான் அழத் தொடங்கினேன். என்னால் அவ்வாறு அழாம லிருக்க முடியவில்லை எனக்குள் இருக்கும் ஏதோ ஒன்று இயற் கையின் மேல் பாசம் கொண்டுள்ளது. "உமது மதகுகளின் இரைச் சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடும் போது" (சங். 42:7) என் இருதயம் உருகிவிடுகிறது. உள்ளில் உள்ள ஏதோ ஒன்று ஆழத்தை நோக்கில் கூப்பிடும்போது, அதற்கு பதிலளிக்க ஒரு ஆழம் இருந்தாக வேண்டும். மீனின் முதுகில் துடுப்புகள் (Fin) இருப்பதற்கு முன்பு, அது நீந்துவதற்கென்று தண்ணீர் இருந்தாக வேண்டும். பூமியில் ஒரு மரம் இருப்பதற்கு முன்பு, முதலில் பூமி இருந்தாக வேண்டும். இல்லையெனில் ஒரு மரமும் இருக்காது. சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பையன் பென்சில் எழுத்தை அழிக்க உதவும் ரப்பர் துடைப்பானை (Eraser) தின்னும் சம்பவத்தை நான் வாசித்தேன். அவனுடைய தாய் அவன் சைக்கிள் பெடலில் உள்ள ரப்பரை தின்பதாக கண்டு பிடித்தார்களாம். அவனை மருத்துவ ஸ்தலத்தில் பரிசோதித்து பார்க்கையில், அவனுக்கு கந்தகத்தின் மேல் தீவிர ஆசை இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டதாம். உங்களில் உள்ள ஏதோ ஒன்றுக்கு கந்தகத்தின் மேல் தீவிர ஆசை இருக்குமானால், அதற்கு பதிலளிக்க கந்தகம் இருந்தாக வேண்டும். சிருஷ்டிப்பு என்று ஒன்று இருக்குமானால், அந்த சிருஷ்டிப்பை சிருஷ்டிக்க ஒரு சிருஷ்டி கர்த்தர் இருக்க வேண்டும். ஏற்கனவே தேவனை ருசிபார்த்த ஆணோ அல்லது பெண்ணோ அவரை அதிகமாக அடைய ஆவல் கொண்டிராமல் இருந்ததில்லை எனலாம். நீங்கள தேவனை அதிகமாய் அடைவதற்கென முயன்று கொண்டிருக் கிறீர்கள். தேவனை அதிகமாக அடைய உங்களுக்குள் ஆவல் இருக்குமானால் அதை அடைவதற்கு அதிகமான தேவன் எங்காவது, இருந்தாக வேண்டும். நான் வானவில்லின் வண்ணங்களைக் கண்டேன். எனக்குள் ஏதோ ஒன்றிருந்தது. என்னால் அடக்கி கொள்ள முடியவில்லை. தேவனை என்னால் வானவில்லில் காண முடிந்தது. என்னால் தேவனை சூரிய அஸ்தமனத்தில் காண முடிந்தது. தேவன் அழைப் பதை என்னால் கேட்க முடிந்தது. என்னால் தேவனை எங்கும் காணவும் கேட்கவும் முடிந்தது. நீங்கள் தேவனை உள்ளில் பெற்றிருப்பீர்களானால், நீங்கள் பார்க்கும் எல்லாவிடங்களிலும் அவரைக் காணலாம். ஆனால் அவர் முதலில் உங்கள் இருதயத் துக்குள் வரவேண்டும். அவர் உங்களை ஒரு கோழிக்குஞ்சிலிருந்து ஒரு கழுகாக மாற்ற வேண்டும். ஏதாவதொன்றைச் செய்ய அவர் உங்களுக்கு வாஞ்சையைத் தர வேண்டும். நான் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு அணில் ஓசையிடும் சத்தத்தைக் கேட்டேன். சகோதரராகிய நீங்கள் அவைகளை ஒருக் கால் அறிந்திருக்கக் கூடும். அவை ஒரு உபயோகமுமில்லாமல் உரக்க சத்தமிடும். அது ஒரு அடி மரத்தின் மேல் உட்கார்ந்து கொண்ட சும்மா சத்தமிட்டுக் கொண்டேயிருந்தது. நான், "சிறு அணிலே, நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று நினைத்துக் கொண்டேன்.அது புயலின் காரணமாக அடைக்கலம் தேடி இறங்கி வந்திருந்த அந்த பெரிய கழுகைக் கண்டு விட்டது. அந்த பெரிய கழுகு குதித்து பறந்தது. நான், "ஓ இந்த சிறு அணில் எதற்காக இவ்வளவு சாத்த மிடுகிறது என்று இப்பொழுது எனக்குப் புரிந்து விட்டது" என் றேன். அது என்னைக் கவனிக்கவில்லை. அது அந்த கழுகை கவ னித்துக் கொண்டிருந்தது. நான் அவைகளை சிறிது நேரம் உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். நான், "தேவனே, நீர் ஏன் என் சிந்தனையை அங்கிருந்து இங்கு கீழே மாற்றினீர் இதில் என்ன உள்ளது?" என்று எண்ணினேன். இங்கு சிறிதும் உபயோகம் இல்லாத ஒரு அணில் உள்ளது. இங்கு ஒரு கழுகு உள்ளது. அது செய்யும் ஒன்றே ஒன்று ஆகாயத் தில் பறப்பதே. "நீர் ஏன் என் பார்வையை இந்தப் பக்கம் திருப் பினீர்?" என்று எண்ணினேன். அந்த கழுகு தன் செட்டைகளை அசைத்துக் கொண்டிருப்பதை நான் கவனித்துக் கொண்டிருந் தேன். நான், "என்னைக் கண்டு பயப்படுகிறாயா? இங்கு என்னி டம் துப்பாக்கி உள்ளது. வேண்டுமானால் உன்னை என்னால் சுட்டு வீழ்த்த முடியும்" என்று எண்ணினேன். நான் துப்பாக்கியைக் கையிலெடுத்தேன். அந்த பெரிய கண்கள் என்னையே உற்று நோக்கிக் கொண்டிருப்பதை நான் கண்டேன். அது தன் செட்டை களை அசைத்துக் கொண்டேயிருந்தது. நான், 'ஆம், உனக்கு ஏன் இவ்வளவு தைரியமுள்ளது என்று எனக்குப் புரிகிறது. நீ கோழை யாக இல்லாதிருப்பதன் காரணம் இதுவே. தேவன் உனக்கு இரண்டு பெலத்த செட்டைகளை கொடுத்திருக்கிறார். உனக்கு அந்த செட்டைகளின் மீது அளவு கடந்த நம்பிக்கை உள்ளது" என்று நினைத்துக் கொண்டேன். நாம் மட்டும் எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தையாகிய வேதாகமத்தின் செட்டைகளை தரித்துக் கொண்டு, பரிசுத்த ஆவியின் மூலம் தேவனுடைய வார்த்தையின் பேரில் உயர் நம்பிக்கை கொண்டிருப்போமானால்! கழுகுக்கு தன் செட்டைகளின் மீதுள்ள உயர் நம்பிக்கை அளவுக்கு நமக்கு உயர் நம்பிக்கை இருக்குமானால்! அது ஒரு குதி குதித்து அந்த மரத்துக்கு மேல் பறந்து சென்று விட முடியுமென்று அறிந்திருந்தது. என்னால் அதை சுட்டு வீழ்த்தவே இயலாது. நான் அதை உற்று நோக்கிக் கொண்டேயிருந்தேன். சிறிது கழிந்து அதற்கு சலிப்புண்டானவுடன், அது ஒரு பெரிய குதி குதித்து இருமுறை தன் செட்டைகளை அடித்தது. அதன் பிறகு அது என்ன செய்தது தெரியுமா? அது மறுபடியும் தன் செட்டைகளை அடிக்கவில்லை. அது தன் செட்டைகளை எவ்விதம் விரிக்க வேண்டும் என்பதை அறிந்திருந்தது. அது தன் செட்டைகளை விரித்தது. காற்று அடித்த போது அவைகளை உயர கொண்டு சென்றது. நான் நின்று கொண்டு, அதன் உருவம் ஒரு சிறு புள்ளியைப் போல் ஆகும் வரைக்கும் கவனித்துக் கொண்டேயிருந்தேன். நான் மறுபடியும் அழ ஆரம்பித்தேன். நான், "தேவனே, இது தான். சபை மட்டும் விசுவாசம் என்னும் தன் செட்டைகளை தேவனுடைய வாக்குத்தத்தத்துக்குள் விரிக்க அறிந்திருந்து, ஒவ்வொன் றாக தோன்றிக் கொண்டிருக்கும் ஸ்தாபனக் கொள்கைகளின் மீது சாராமல் இருக்குமானால் ! ஸ்தாபனக் கொள்கைகள் அல்ல அதற் கவசியம். அத அவருடைய வாக்குத்தத்தத்தின் பேரில் உங்கள் செட்டைகளை விரிப்பதாகும். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் உங்களை உயரத் தூக்கி கொண்டு செல்கிறார். அங்கு உட்கார்ந்து கொண்டிருந்து அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன. பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்று ஒன்று கிடையாது, நீங்கள் ஒரு கூட்டம் மடையர்கள், அவ்வளவுதான்" என்று ஓயாமல் க்ரீச் , க்ரீச் என்று சத்தமிட்டுக் கொண்டிருந்த இவ்வுலகத்திற்குரிய அணிலை அது விட்டுச் சென்றது. அந்த கழுகு, இங்கும் அங்கும் ஓயாமல் உண்டாக்கிக் கொண்டிருந்த இந்த சத்தங்களை விட்டகன்று உயர சென்றுவிட்டது. நாம் தாமே கழுகின் செட்டைகளை தரித்துக் கொண்டு, நமக்கு வேதாகமத்தில் அளிக்கப்பட்டுள்ள தேவனுடைய ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் ஏற்றுக் கொள்ள தேவன் உதவி புரிவாராக! அதன் காரணமாகத் தான் நண்பர்களே, நீங்கள் அடிமைத் தனத்தில் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. ஏனெனில் தேவனுடைய வாக்குத்தத்தத்தில் உங்கள் செட்டைகளை விரித்தீர்கள். அப்பொழுது விசுவாசத்தினால் பரிசுத்த ஆவியானவர் உங்களை உயரத் தூக்கிக் கொண்டு சென்றார். கழுகு தன் கூட்டை கலைத்துக் கொண்டிருக்கிறது. எவனாகிலும் தன் செட்டைகளை தேவனுடைய வாக்குத்தத்தத்தின் பேரில் விரிக்கத் துணிந்தால், தேவன் அவனை, அவன் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நிர்ப்பாக்கியமுள்ள, அநீதியுள்ள, தேவ பக்தியற்ற , சுயநல முள்ள வாழ்க்கையிலிருந்து அகற்றி, அவனை சுயாதீனமுள்ளவனா யும், மகிழ்ச்சியுள்ளவனாயும், பாவத்துக்கு அப்பால் வாழ்பவனாகவும், இவ்வுலகம் ஒன்றுமே அறிந்திராத அந்த பேரின்பமான சூழ்நிலை யில் வாழும்படி செய்வார். ஆமென். ஒருமுறை நான் ஓஹையோவிலுள்ள சின்சினாட்டி என்னு மிடத்தில் அமைந்துள்ள மிருகக்காட்சி சாலைக்கு சென்றிருந்த சம்பவம் என் நினைவுக்கு வருகிறது. அப்பொழுது தான் பிடிபட்டு கூட்டில் அடைக்கப்பட்டிருந்த ஒரு கழுகை அங்கு நான் உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். அது நான் கண்ட மிகப் பரிதாபமான காட்சிகளில் ஒன்றாகும். ஆகாயத்துக்குரிய இந்த மகத்தான பறவை யாரோ ஒருவரால் வலை வீசி பிடிக்கப்பட்டு கூட்டில் அடைக்கப் பட்டிருந்தது. அந்த ஏழை பறவை அந்த இடத்துக்கு பொருந்தாத ஒன்றாக இருந்தபடியால், அது தன் முழு பெலத்தோடும் குதித்து செட்டைகளை அடித்த போதிலும், அது கூட்டின் பெரிய கம்பிகளின் மேல் மோதி கீழே விழுந்தது. அது கம்பிகளின் மேல் அடிக்கடி மோதியதால் அதன் செட்டைகளிலுள்ள சிறகுகள் அனைத்தும் உதிர்ந்து விழுந்து, அதன் தலையும் முகமும் காயப்பட்டிருந்தன. நான் தொடர்ந்து அதை கவனித்துக் கொண்டேயிருந்தேன். அது பெருமையுடன் முன்னும் பின்னும் நடக்கும், அதன் பிறகு தன் முழு பலத்தோடும் கம்பிகளின் மேல் மோதி கீழே விழும். பிறகு அது தரையில் கிடந்து, அதன் களைப்புற்ற கண்கள் ஆகாயத்தையே நோக்கிக் கொண்டிருக்கும். அது பூமியில் இருப்பதற்காக உண் டாக்கப்படவில்லை என்று நினைத்துக் கொண்டேன். அது வானத்துக்குரிய பறவை. அதன் முழு உடலமைப்பே, இந்த பூமிக்கு மேலுள்ள நீல வானத்தில் வாழ்வதற்கென உண்டாக்கப்பட்டுள்ளது. நீல வானத்தில் உயர எழும்பிப் பறப் பதற்கென உண்டாக்கப்பட்டிருந்த அந்தப் பறவை மனித தந்தி ரத்தினால் பிடிபட்டு வாழ்நாள் முழுவதும் கூட்டில் அடைபட்டி ருப்பது எவ்வளவு பரிதாபமான காட்சி! ஆனால், சகோதரரே, நாம் சிக்காகோ நகரத்தின் வீதிகளில் அல்லது வேறெந்த பெரிய நகரத்திலும் நடந்து செல்வோமானால், தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டு, உன்னதமானவரின் குமாரரும் குமாரத்திகளுமாக இருக்க வேண்டிய மானிடர், பாவம், கெட்ட பழக்க வழக்கங்கள், லௌகீக கவலைகள், இவைகளின் கார ணமாக உருமாற்றப்பட்டிருப்பதை காணலாம். இவர்கள் கூட்டில் அடைபட்டிருந்த அந்த கழுகைக் காட்டிலும் மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளனர். மனிதன் கட்டப்பட்டிருக்க உண்டாக்கப்படவில்லை. அவன் சுயாதீனமாயிருப்பதற்கே உண்டாக்கப்பட்டிருக்கிறான். "குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்" (யோவான் 8:36). அவன் அடிமைத்தனத்திலிருக்க வேண்டிய தில்லை. மானிடர் எவ்வாறு தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொண்டு, தேவனால் அளிக்கப்பட்ட உரிமைகளின்படி வாழாமல் இருப்பதை நான் எண்ணிப் பார்க்கையில், என் இருதயத்தில் உள்ள உணர்வுகளை வெளிப்படையாகக் கூறுவதற்கு எனக்கு பல மணிநேரம் பிடிக்கும். மனிதன் தேவனுடைய சாயலில் உண்டாக்கப்பட்டிருக்கிறான். அவன் சாத்தானுக்கு அடிமையாயிருக்க வேண்டியதில்லை. மனிதன் குமாரனாயிருக்க, தேவன் அவனை தம்முடைய சொந்த சாயலிலே உண்டாக்கினார். அவர் அவனுக்குள் ஒரு ஆத்துமாவை வைத்து தேவன் பேரில் தாகத்தைக் கொடுத்தார். ஆனால் மனிதனோ அந்த ஆசிர்வதிக்கப்பட்ட புனிதமான தாகத்தை மதுபானத்தினாலும், புகையிலையினாலும், வெவ்வேறு விதமாக வாழ்வதினாலும் தீர்த்துக் கொள்ள முற்படுகிறான். தேவன் பேரிலுள்ள தாகத்தை மற்ற காரியங்களினால் தீர்த்துக் கொள்வது பெருத்த அவமானமாகும். பாவத்தினால் அவன் கட்டப்பட்டிருக்கிறான் தேவன் அதை விரும்புகிறார் என்றல்ல, மனிதன் தன் விருப்பப்படி அந்த நிலைக்கு ஆளாகிறான். கழுகின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்து, அதன் உருவமைப்பை சிந்தித்து, அந்த மாதிரியை பின்பற்றி, நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது நமக்கு நன்மை பயக்கும். எனக்கு வார்த்தையில் விசுவாசம் உண்டு. கழுகு தன் இளமையைப் புதுப்பித்துக் கொள்வதாக அது உரைக்கிறது. கழுகு தன் இளமையை அடிக்கடி புதுப்பித்துக் கொண்டு, மறுபடியும் இளமை பருவம் அடைவதாக எண்ணப்பட்டு வந்தது. பின்னர் நாம் அறிந்து கொண்டது என்னவெனில், அது இளமையை புதுப்பித்துக் கொள்வதில்லை என்றும், உண்மையில் என்ன நடக்கிறதென்றால், அதற்கு நல்லுணர்வு தோன்றும் நேரங்கள் உண்டாகின்றன என்றும், அப்பொழுது அது இளமை பருவம் உள்ளது போல் நடந்து கொள்கிறது என்பதே. இதை நான் ஒரு எழுப்புதலுக்கு ஒப்பிடலாம். எழுப்புதலின் போது தேவனுடைய கழுகுக் குஞ்சுகள், சிறிது வயது சென்ற வர்களாய் இருந்த போதிலும், மறுபடியும் இளமை உணர்ச்சியை அடைகின்றனர். தேவனுடைய சமூகம் அருகாமையில் உள்ளதை நான் அறிந்து கொள்ளும் போது, மற்ற நேரங்களில் உள்ளதைக் காட்டிலும் எனக்கு மேலான உணர்வு தோன்றுகிறது. நீங்கள் கூர்ந்து கவனிப்பீர்களானால், இளமை பருவத்தை புதுப்பித்துக் கொள்ளும் விஷயத்தில் நாம் எவ்வாறு கழுகுக்கு ஒப்பிடப்படுகிறோம் என்பதை நீங்கள் காணலாம். முதலாவதாக, முழுவதுமாக தேய்ந்து போய் ஏறக்குறைய சாகும் தருவாயை அடைகிற ஒரே பறவை அதுவே. அது மறுபடியும் பெலன் கொண்டு ஒரு இளம் பறவையைப் போல் ஆகாயத்தில் உயர எழும்பிப் பறக்கும். தேவன் ஏன் நம்மை கழுகுக்கு ஒப்பிடுகிறார்? அதன் காரணம் இதுவே. நிங்கள் மிகவும் சோர்ந்து போயிருக்கையில், ஒரு நல்ல எழுப்புதல் உண்டாகி நீங்கள் ஆவியில் புதுப்பிக்கப் படுகிறீர்கள். ஒரு நகரத்தில் எழுப்புதல் உண்டாகும் போது. வயோதிபரும் வாலிபரும் புதுப்பிக்கப்பட்டு, மகிழ்ச்சி கொண்ட பிள்ளைகள் செய்வது போல், நடனமாடி கர்த்தரில் களிகூருவதை நான் கண்டிருக்கிறேன். சக்கர நாற்காலிகளில் அமர்ந்திருப்பவர், புற்று நோயினால் மரணப்படுக்கைகளில் உள்ளவர்கள், தேவனுடைய ஆவி எழுப் புதலின் போது அசைவாடின போது, அவர்கள் புதுப்பிக்கப் பட்டு சக்கர நாற்காலிகளையும் கட்டில்களையும் விட்டு எழுந்திருந்து களி கூர்ந்தவர்களாய் உயரப் பறப்பதை நான் கண்டிருக்கிறேன். நம் முடைய மகத்தான தேவன் நம்மை புதுப்பிக்கிறார். அவர் நமது ஆரோக்கியத்தை புதுப்பிக்கிறார், நமது பெலனை அவர் புதுப் பிக்கிறார், நமது நம்பிக்கையை அவர் புதுப்பிக்கிறார். அவர் நம்மை சதா புதுப்பித்துக் கொண்டேயிருக்கிறார்! ஆமென். அருமையான வர்களே, நாம் ஏன் கழுகுக்கு ஒப்பிடப்பட்டுள்ளோம் என்பதை உங்களால் காணமுடிகிறதா? அவைகளைப் போல நாம் ஆவியில் புதுப்பெலன் அடைகிறோம். நீங்கள் மற்றொரு காரியத்தை கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். அதாவது, தாய் கழுகு தன் கூட்டை தரையில் கட்டுவதில்லை. அது மிகவும் உயர்ந்த மலைச் சிகரத்துக்கு செல்கிறது. தாய் கழுகு தன் கூட்டை கன்மலையில் கட்டி, தன் குஞ்சுகளைப் போஷித்து வருகிறது. ஒரு நாள் அது, தன் குஞ்சுகள் கோழிக் குஞ்சுகளைப் போல் இருக்கக் கூடாது என்று தீர்மானிக்கிறது. கோழிக் குஞ்சும் கழுகைப்போல் ஒரு பறவையே. ஆனால் அது பூமியில் வளரும் ஒரு பறவையாகும். அது செட்டைகளை அடித்து சிறிது பறக்கக்கூடும். ஆனால் அதனால் தன் கால்களை தரையி லிருந்து மேலே எடுக்க முடியாது. இன்று சிலர் கிறிஸ்தவ மார்க்கம் என்று அழைக்கப்படுவதை பெற்றுள்ளதை அது எனக்கு நினைப்பூட்டுகிறது. அவர்களை நிர்ப் பாக்கியமுள்ளவர்களாக்கப் போதுமான மார்க்கம். உங்கள் பெயர் ஸ்தாபன புத்தகங்களில் இருப்பதாக நீங்கள் ஒருக்கால் கூறலாம். ஆனால் நீங்கள் எப்பொழுதாகிலும் வானத்திற்கு உயர எழும்பின துண்டா? கழுகு ஒருபோதும் தன் கூட்டை பூமியில் கட்டுவதில்லை. அதனால் எவ்வளவு உயரத்தில் கட்ட முடியுமோ, அவ்வளவு உயரத்தில் அதன் கூட்டை ஒரு கன்மலையில் கட்டுகிறது. அது ஜீவனுள்ள தேவ னுடைய சபைக்கு ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்கின்றது. தேவன் நம்மை கல்வாரி மலையின் பிளவிலே, சத்துருவின் ஊளைகளுக்கு அப்பால் ஒளித்து வைத்துள்ளார் என்று அறிவது எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு சிலாக்கியமாயுள்ளது! ஓ, நமக்குள்ள சிலாக்கியங்கள்! அந்த கன்மலையின் உயரத்தில் தாய் கழுகு தன் குஞ்சுகளை பொறிக்கிறது. அவைகளை அது, ஓநாய்கள் ஒருபோதும் ஏற முடியாத அந்த உயரமான கன்மலையில் பேணிப் பாதுகாக்கிறது. ஓநாய்கள் எட்டமுடியாத உயரத்தில் அது உள்ளது. நாம் அனுமதிப்போமானால், பிசாசுகளின் ஊளைகள் நம்மை தொந்தரவு செய்ய முடியாத ஒரு இடத்தில் நமது பரலோகப் பிதா நம்மை வைப்பார் என்பதைக் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். அங்கு மதுபானத்தின் கவர்ச்சியும், இரவு 'க்ளப்பு களும் நமைத் தொட முடியாது. அது இவ்வுலகின் மாசு படிந்த நீரோடைகளுக்கும் அதன் மாயையான தோற்றங்களுக்கும் அப்பால் உள்ளது. தாய் கழுகு தன் கூட்டை கட்டும்போது. அது கொடிகளையும், குச்சிகளையும், இலைகளையும், மரத் துண்டுகளையும், முட்களையும் கொண்டு வந்து கட்டுகிறது. முட்களும் குச்சிகளும் குஞ்சுகளைக் குத்தக் கூடாது என்பதைக் குறித்து அது மிகவும் கவனமாய் உள்ளது. ஆகவே அது என்ன செய்கிறது? அது சென்று ஒரு ஆட்டுக் குட்டியைக் கண்டு பிடித்து, அதைக் கொன்று, அதன் தோலைக் கொண்டு வந்து, அதை கூட்டின் உள்பாகத்தில் சுற்றிலும் பரப்பி, அதன் குஞ்சுகளுக்கு அந்த கூட்டை மிக மிருதுவாகவும் சௌகரியமுள்ளதாயும் செய்கிறது. தேவனும் அதைதான் நமக்குச் செய்கிறார். நாம் மறுபடியும் பிறக்கும் தருவாயில் இருப்பதை தேவன் காணும்போது, ஆராதனைகளின் போது நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை அறிய அவர் நம்மை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார் - அதை மறந்து போக வேண்டாம். அவர் தம்முடைய ராஜ்யத்தில் உங்களுக்கென ஒரு கூட்டை ஆயத்தப் படுத்துவார். ஏனெனில் விரைவில் மற்றொரு கழுகு அவருக்குப் பிறக்கும் என்பதை அவர் அறிந்திருக்கிறார். அவருடைய ஆவி உங்களை தம் பக்கம் இழுக்க முயற்சிக்கும் போது, நீங்கள் எவ்வளவு மனமுவந்தவர்களாகவும் அமைதியாகவும் உணர்வதை கவனி யுங்கள். கவனியுங்கள் - தேவ ஆட்டுக் குட்டியானவரே உங்கள் இல்லத்தை மிக அழகாகவும், சமாதானமாகவும், பாதுகாப்புள்ளதாகவும் செய்கிறார் அல்லவா? அவரே உங்கள் கூட்டின், உங்கள் இல்லத்தின் ஆட்டுக்குட்டியானவராயிருக்கிறார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நண்பர்களே, இந்தவிடத்தில் இதனை வலியுறுத்த விரும்பு கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, தேவன் உங்களுக்கு கொடுத் துள்ள அழகான இல்லத்துக்காக அவரைப் பாராட்டுங்கள். தேவ தூதர்கள் காலடி வைத்து நடக்கப் பயப்படும் இடத்தில் மூடர்கள் தான் அடிபாகத்தில் ஆணிகள் அடிக்கப்பட்ட காலணிகளை அணிந்து நடப்பார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேவனுடைய பிள்ளைகளாகிய நீங்கள் குறை கூறி முறுமுறுப்பதைக் கேட்கும் போது, எனக்கு எவ்வளவு வருத்தமாயுள்ளது! நீங்கள் இதைக் குறித்து குற்றமுள்ளவர்களாயிருந்தால் உங்களுக்கு வெட்க மாயில்லையா? மற்றவர்களை உருளும் பரிசுத்தர் என்றும் மூடபக்தி வைராக்கியம் உள்ளவர் என்றும் அழைக்கும் உங்களுக்கு அவமானம்! அப்படிப்பட்ட சொற்களை உபயோகிக்கும் நீங்கள் மூடர்கள் என்று அறிகிறதில்லையா? இதை நான் உங்களிடம் கூற விரும்புகிறேன் - அதாவது மூடன் ஒருவன் தான் ஒரு கிறிஸ்தவனை உருளும் பரிசுத்தன் அல்லது வேறெதாவது அவமரியாதையான சொற்களால் அழைப்பான், ஆனால் தேவதூதர்களோ அவ்விதமான சொற்களை உபயோக்ககாமலிருப்பது மட்டுமல்ல, அப்படிப்பட்ட காரியங்களை சிந்தித்துப் பார்க்கவும் கூட பயப்படுவார்கள். கூட் டத்துக்கு வருகின்ற ஜனங்களாகிய நீங்கள் தேவனுடைய கிரியை களை பெயல்செபூல் என்றழைக்கிறீர்கள், அல்லது சிரத்தையற் றவர்களாய், ஓரிரண்டு இரவுகள் கூட்டங்களுக்கு வந்துவிட்டு, அலட்சியமாக தோள்களை தூக்கி குலுக்கி விட்டு சென்று விடு கிறீர்கள். உங்களுக்கு அவமானம்! தேவனுடைய ஊழியக்காரர் அல்லது அவருடைய பிள்ளைகளுக்கு விரோதமாக ஒரு வார்த் தையும் கூற தேவதூதர்கள் துணியமாட்டார்கள் என்று நீங்கள் அறிகிறதில்லையா? நடைபெறுகின்ற ஒவ்வொரு கூட்டத்திலும், உதவி செய்வதற்கென தேவன் தமது தூதர்களை வைத்திருக்கிறார். இந்த தூதர்கள் கூட்டம் முழுவதிலும் உங்களை கவனித்து உங்களைக் காக்கின்றனர். அதன் பிறகு உங்களுடன் வீட்டுக்குச் சென்று உங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் கட்டளை பெற்றுள்ளனர். இங்கு உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன் - இதைப் போல் நீங் களும் உங்கள் சகோதரனைக் குறித்து கருத்துள்ளவர்களாயிருக்கிறீர்களா? ஓ, அவருடன் கூட நாம் நடக்க அவர் இதை எவ்வளவு இலகுவாக்கியிருக்கிறார்! நாம் மறுபடியும் தாய் கழுகைப் பார்ப்போம். அந்த சிறு கழுகு குஞ்சுகளை அது எவ்வளவாக கவனித்து, அவைகள் அசைவு ஒவ்வொன்றையும் கவனித்து வருவதைப் பாருங்கள். அது அவை களுக்காக கவலை கொள்கிறது, அவைகள் கூட்டை விட்டு வெளியே விழாதபடிக்கு பார்த்துக் கொள்கிறது. நமது மகத்தான பரலோகப் பிதா எவ்வளவாக உங்கள் மேல் கவனமாயிருக்கிறார் என்பதைப் பாருங்கள். நீங்கள் விழ அவர் அனுமதிப்பதில்லை. யேகோவா கழுகு தம் குஞ்சுகளின் மேல் கவனம் செலுத்துகிறார் ! ஓ அல்லேலூயா ! தேவன் நம் பேரில் கவனம் செலுத்தாமல் போனால், தேவனுடைய வல்லமையினால் நமது கழுத்தை முறித்துக் கொள் வோம் என்று நான் சில நேரங்களில் நினைப்பதுண்டு. அவர் நமக்கு வரம்புகளை நிர்ணயிக்கிறார். அவர் நம்மை கூட்டில் வைத்து, தமது பெரிய செட்டைகளை நம் மேல் விரிக்கிறார். அவர் இவ்விதம் செய்யும் போது, எவருமே நமக்கு தீங்கிழைக்க முடியாது. அல்லது அவருடைய கரங்களிலிருந்து - தமது சொந்த கூட்டிலிருந்து -- பறித்துக் கொள்ள முடியாது. நீங்கள் முதலில் அவரால் ஜெநிப் பிக்கப்பட்ட போது, எவ்வளவு உதவியற்றவர்களாயிருந்தீர்கள் என்பதை எண்ணிப் பாருங்ள் - அவர் எவ்வளவாக அப்பொழுது உங்கள் மேல் கவனம் செலுத்தினார் என்பதைப் பாருங்கள். அவர் உங்கள் மேல் கவனம் செலுத்துவதை ஒரு போதும் நிறுத்து வதேயில்லை. நாம் எவ்வளவாக ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்! தன் குஞ்சுகளுக்கு முழுவதுமாக சிறகுகள் வளரும் வரைக்கும் தாய் கழுகு அவைகளை கவனித்து வருகின்றது. அவைகள் போதிய அளவுக்கு வளர்ந்துவிட்டன என்று தாய் கழுகு நினைக்கும்போது, அது கூட்டைக் கலைக்கிறது. இதை நான் பைனாகுலர் வழியாக பார்க்கும் போது நான் அழுததுண்டு. அது கூட்டை நோக்கி வேக மாக பறந்து வந்து, தன் பெரிய செட்டைகளினால் ஒரு பெருத்த காற்றை உண்டாக்கும். அப்பொழுது கழுகு குஞ்சுகளுக்குள்ள தளர்ந்த சிறகுகள் அனைத்தையும் அது குலுக்கி விடுகிறது. ஏனெ னில் அவை முதன் முறையாக தனியே பறப்பதற்கு தாய் கழுகு அவைகளை ஆயத்தப்படுத்துகிறது. ஏதோ ஒன்று நடக்கப் போகின் றது என்பதை கழுகு குஞ்சுகள் அறிந்து கொள்கின்றன. ஏனெனில் அவை கழுகுகள். அவை பலத்த பெருங்காற்றை உணருகின்றன, கூடும் குலுக்கப்படுகிறது. தாய் ஒரு குறிப்பிட்ட சத்தத்தை எழுப்பி தன் செட்டைகளை விரிக்கின்றது. அப்பொழுது அந்த சிறு குஞ்சுகள், தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இயற்கையான சுபாவத்தின் மூலம், தங்கள் கால்களை எப்படி அதன் செட்டைகளின் மேல் வைப்பதென்றும், தங்கள் சிறு அலகுகளினால் எப்படி அந்த பெரிய பலத்த சிறகுகளைப் பிடித்துக் கொள்வதென்றும் எப்படியோ அறிந்து கொள்கின்றன. தாய் பெருமையுடன் தன் தலையைத் திருப்பி, தன் செட்டைகளின் மேல் தன் குஞ்சுகளைக் கண்டு, க்ரீச் என்று சத்தமிடுகிறது. ஏனெனில் அது மகிழ்ச்சியினால் பொங்குகிறது. அதன் குஞ்சுகள் அவைகளின் ஸ்தானத்தை அறிந்துள்ளன. அது தன்னால் கூடு மானவரை உயர பறந்து செல்கிறது, அப்பொழுது கழுகு குஞ்சுகள் சிறிதும் கூட முறுமுறுப்பதில்லை. அவை பிடித்துக் கொண்டு, அவை நினைத்தும் கூட பார்க்காத இடங்களுக்கு செல்கின்றன. அவை நீல வானத்தில் உயர பறந்து செல்கின்றன. அவை உயர அடையும் போது, தாய் நடு வானத்தில் அவைகளை உதறி விடுகின்றது. அப்படி செய்யும் போது, அவைகளை கை விட்டு விடுவதில்லை. அது ஒரு பெரிய வட்டமிட்டு, அவைகளை கவனிக்கின்றது. அதோ அந்த குஞ்சுகள். முதன்முறையாக அவை தங்கள் செட்டைகளை அடிக்கின்றன. அவை குட்டிக்கரணம் அடிக் கின்றன, மற்றெல்லாம் செய்கின்றன. இருந்தபோதிலும், அவை செட்டைகளை அடிக்கின்றன. அவைகளுக்கு களைப்புண்டாகும் போது, தாய் துரிதமாக அவைகளுக்கு கிழே பறந்து வந்து அவை களை மறுபடியும் உயர சுமந்து செல்கிறது. சில சமயங்களில் அது ஒரு குஞ்சை ஒரு காலிலும், வேறொரு குஞ்சை மற்ற காலிலும் பிடித்து அவைகளை உயர கொண்டு செல்கிறது. கழுகு குஞ்சுகள் கவலையின்றி உள்ளன. ஏனெனில் அவை தங்கள் சொந்த திறனின் மேல் சார்ந்திராமல், தங்களை கவனித்துக் கொண்டிருக்கின்றன. அவைகளுடன் அது முடித்துக் கொண்டு, அவைகளும் தங்கள் விளையாட்டுகளை அனுபவித்து முடித்த பிறகு, அது தன் பெரிய செட்டைகளை விரிக்கின்றது. அவை செட்டைகளின் மேல் அமர்ந்து கொண்டு, தங்கள் அலகுகளினால் ஒரு சிறகைப் பிடித்துக் கொள்கின்றன. அப்பொழுது அது அவைகளை கீழே மற்றொரு புதிய இடத்துக்கு, பசுமையான இடத்துக்கு, கொண்டு செல்கின்றது. இதற்கு முன்பு அவை தங்கள் கால்களை அந்த இடத்தில் வைத்ததேயில்லை. எனவே அவை செட்டைகளிலிருந்து கீழே குதித்து, மற்றொரு யூபிலியை அனுபவிக்கின்றன. அவை மிகவும் கவலையற்றவைகளாய் உள்ளன. அவைகளுடைய வேலை அங்கு முடிந்த பின்பு, அது மீண்டும் அவைகளை சுமந்து கொண்டு உயரமான இடத்திலுள்ள கன்மலைக்கு பறந்து சென்று, அங்கு உட் கார்ந்து கொண்டு அவைகளை கவனித்துக் கொள்கிறது. அவை களுக்கு தீங்கிழைக்க நினைக்கும் எந்த ஒன்றுக்கும் ஐயோ! கழுகு குஞ்சுகள் தங்கள் கால்களை எவ்விதம் கழுகின் செட்டைகளின் மேல் வைக்க வேண்டுமென்றும், தங்கள் அலகு களினால் எவ்விதம் ஒரு சிறகைப் பிடித்துக் கொள்ள வேண்டு மென்றும் அறிந்துள்ளன. அவைகளை எப்படி செய்ய வேண்டு மென்று தேவன் அவைகளுக்குப் போதிக்கிறார். அது போன்று. ஜீவனுள்ள தேவனுடைய சபையும் மகத்தான குலுக்கல் நேரிடும் போது தேவனுடைய வார்த்தையை எவ்விதம் பிடித்துக் கொள்ள வேண்டும், விடுதலையளிக்கும் அந்த பலத்த செட்டைகளை எப்படி பிடித்துக் கொள்ள வேண்டும், தேவனால் அளிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வார்த்தையும் எவ்விதம் பற்றிக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்துள்ளது. அவர்களுக்கு கழுகின் சுபாவம் இருப்ப தால், அவர்கள் இறுகப் பற்றிக் கொள்கின்றனர். தாய் கழுகு பெருமையுடன் தன் தலையை திருப்பி, தன் குஞ்சுகள் தன் செட்டைகளின் மேல் உள்ளதைக் காண்கிறது. அது போன்று, சபையும் வார்த்தையில் தன் ஸ்தானத்தை எடுத்துக் கொண்டு, தேவன் அளித்துள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் உரிமை கோரும் போது, தேவன் என்ன செய்வார் என்று நான் அடிக்கடி எண்ணினதுண்டு. தேவன் அவர்களை பெருமையுடன் நோக்கி, உண்மையான அன்பினால் அவர்களை நேசிக்கிறார். கிறிஸ்துவின் சரீரத்திலுள்ள ஒவ்வொரு அங்கத்தினனும் தன் ஸ்தானத்தை சரியான இடத்தில் எடுத்துக் கொள்கிறான். ஊழி யக்காரன் தன் ஸ்தானத்தில், தீர்க்கதரிசி தன் ஸ்தானத்தில் தேவன் தம்முடைய சபையை வார்த்தைக்கு கொண்டு சென்று தேவனுடைய வல்லமை இறங்கி வந்து, நாம் பரிசுத்த ஆவியான வரான தேவனுடைய மகத்தான செட்டைகளின் மேல் வழி நெடுக தொடர்ந்து செல்லும் நாள் எப்படிப்பட்ட நாளாயிருக்கும்! கழுகு உயர உயர எழும்பும் போது, கழுகுக்குஞ்சுகள் முறு முறுப்பதில்லை. அவை தங்கள் சிறு அலகுகளை தாயின் சிறகுகளில் பொருத்தியுள்ளன. அவைகளால் முறுமுறுக்கவே முடியாது. அவ் விதமாக தான் தேவன் தமது சபையைக் கொண்டு செல்கிறார். நீங்கள் உண்மையில் வார்த்தையில் பொருந்தியிருப்பீர்களானால், நீங்கள் முறுமுறுக்க மாட்டீர்கள். அந்த சிறு கழுகுக் குஞ்சுகளைப் போல நீங்களும் இறுகப்பற்றிக் கொண்டிருப்பீர்கள். தேவன் ஒரு வாக்குத்தத்தத்தை செய்திருப்பாரென்றால், அவரால் அதை நிறை வேற்ற முடியும். எனவே வார்த்தையில் பொருந்தியிருப்பவர்கள், இறுகப் பற்றிக் கொண்டிருப்பார்கள். தாய் கழுகு தனக்கு சொந்தமானவைகளை கவனித்து வருவது போல, கிறிஸ்துவும் நம் மேல் கவனம் செலுத்தி வருகிறார். அவர் உன்னதமானவரின் வலது பாரிசத்தில் உட்கார்ந்து கொண்டி ருக்கிறார். உலகம் என்ன சொன்னாலும், ஜனங்கள் என்ன எண்ணினாலும் கவலையில்லை. ஒரு அருமையான தருணத்தை அனு பவித்து களிகூருங்கள். நீங்கள் அறிந்திராக காரியங்களை தேவன் உங்களுக்கு வைத்துள்ளது உங்களுக்குத் தெரியாமல் இருக்கு மானால், வந்து அவருடன் சவாரி செய்யுங்கள். தேவன் தமது தீர்க்கதரிசிகளையும் கழுகுகளுக்கு ஒப்பிடுகிறார். பரிசுத்த ஆவியானவர் ஒரு தீர்க்கதரிசியை பரலோக சூழ்நிலைக்கு உயர கொண்டு சென்று, வருங்காலத்தில் நடக்கவிருக்கும் அநேக காரியங்களை அவனுக்குக் காண்பிக்கிறார். அவர் பழைய ஏற்பாட்டின் காலத்திலிருந்த நாகூமை உயரக் கொண்டு சென்ற போது, அவன் இன்று நாம் பெற்றுள்ள மோட்டார் வாகனங்களையும், அவை எவ்விதம் வீதிகளில் ஒன்றோடொன்று மோதிக் கொள்கின்றன என்பதையும் கண்டான். அவன், "இரதங்கள் தெருக்களில் கடகடவென்றோடி, வீதிகளில் இடதுசாரி வலதுசாரி வரும், அவைகள் தீவட்டிகளைப் போல விளங்கி, மின்னல்களைப் போல வேகமாய்ப் பறக்கும்” என்றுரைத்தான் (நாகூம் 2 4). பவுலும் உயர கொண்டு செல்லப்பட்டு, கடைசி நாட்களில் மனிதர், "சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமை யுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிக களாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப் பிரியராயும், தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்" என்று கண்டான் (2 தீமோ. 3:3-5), தேவனுடைய கழுகு என்னும் முறையில் பவுல் தேவனுடைய ஆதிக்கத்துக்கு உயர எழும்பி இவையனைத்தையும் கண்டு, திரும்பி வந்து, நம்மை இதைக் குறித்து எச்சரித்தான். ஓ , கர்த்தருக்கு நன்றி செலுத்துவோமாக! கழுகுகளையும் தீர்க்கதரிசிகளையும் பூமிக்குரிய கோழிக் குஞ்சுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அவர்கள் எவ்வளவு உயரப் பறக்கின்றனர் என்பதை எண்ணிப் பார்க்கிறேன். கழுகு, தன் குஞ்சுகள் பூமிக்குரிய கோழிக்குஞ்சுகளைப் போல் இருக்கக் கூடாது என்று தீர்மானம் செய்கிறது. அதை அது சாதித்து விடும்! ஒரு கோழிக் குஞ்சு ஸ்தாபனத்திலுள்ள உங்கள் நண்பனாக இருக்கக் கூடும். ஆனால் பரலோக காரியங்களைக் குறித்து அவருக்கு ஒன்றுமே தெரியாது. அவர் அங்கு உயர சென்றதேயில்லை. தானியக் களஞ்சியக் கொல்லைப்புறத்திலுள்ள அந்த கோழிக் குஞ்சுகள் தங்கள் கூடுகளில் உட்கார்ந்து கொண்டு, “தெய்வீக சுகமளித்தல் என்பது கிடையவே கிடையாது, அந்நிய பாஷை பேசுதல் என்பது கிடை யவே கிடையாது, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பது கிடை யவே கிடையாது,” என்று க்ளக் க்ளக் என்று சத்தமிட்டுக் கொண் டிருக்கின்றன. நல்லது, அதற்கு எப்படி தெரியும்? அது இருப் பதைக் கண்டு கொள்ள, அது தானியக் களஞ்சியக் கொல்லைப் புறத்தை விட்டு வெளியே செல்லவேயில்லை. அது தேவனுடைய மகத்தான ஆவிக்குரிய உயரங்களாகிய நீல வானத்துக்கு உயர எழும்பிச் சென்றதேயில்லை. கழுகைப் போன்று கோழிக் குஞ்சும் ஒரு பறவையே. ஆனால் பரலோக சூழ்நிலையைக் குறித்து கோழிக் குஞ்சுக்கு ஒன்றுமே தெரியாது. கழுகுகளைக் குறித்து நான் பேசிக் கொண்டிருக்கையில் மேற்கு பாகத்திலுள்ள ஒரு பண்ணையாளர் அடைக்காக வைக்கப் பட்டிருந்த கோழி முட்டைகளுடன் ஒரு கழுகின் முட்டையை வைத்த சம்பவம் என் நினைவுக்கு வருகிறது. அவைகள் பொறித்த போது, கழுகுக் குஞ்சு காண்பதற்கு விகாரமாயிருந்தது. மற்ற கோழிக் குஞ்சுகள் சத்தமிட்ட போது, அவை எவைகளைக் குறித்து சத்தமிடு சின்றன என்பதை கழுகுக் குஞ்சு புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் அவை வித்தியாசமான பாஷையைப் பேசின. நான் என்ன கூறுகிறேன் என்று நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்று நம்புகிறேன். கழுகுக் குஞ்சு கோழிக் குஞ்சுகள் செய்வதை கவனித்துக் கொண்டே வந்தது. அதற்கு என்ன செய்வதென்று புரியவில்லை. கழுகுக் குஞ்சு வினோதமாயிருந்தபடியால், கோழிக் குஞ்சுகள் அதை கொத்தின. தாய் கோழி 'க்ளக்' என்று சத்தமிடும் போது கோழிக் குஞ்சுகளும் 'க்ளக்' என்ற சத்தமிட்டன, ஆனால் கழுகுக் குஞ்சுக்கு அந்த க்ளக்' கை புரிந்து கொள்ள இயலவில்லை. கோழிக் குஞ்சுகள் தாயிடம் வந்த போது, கழுகுக்குஞ்சு வரவில்லை. ஏனெனில் அந்தவிதமான 'க்ளக்'கைக் குறித்து அது ஒன்றுமே அறிந்திருக்க வில்லை. இதைக் குறித்து நான் அதிகம் கூறப் போவதில்லை. நான் எதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். மறுபடியும் பிறந்த உண்மையான தேவனுடைய பிள்ளை உலகத்தின் ஜனங்களைப் போல் நடந்து கொள்வதில்லை. அவர்கள் ஒரு சபையில் சேர்ந்திருப்பதாக கூறிக் கொள்கின்றனர். ஆனால் உங்களால் அந்த களக்கை புரிந்து கொள்ள முடியவில்லை. நீங்கள் கழுகாகப் பிறந்திருக்கிறீர்கள். தேவன் தமக்குச் சொந்தமானவர் களை அறிந்திருக்கிறார். ஒருநாள் அவைகள் கொல்லைப்புறத்தில் இருந்த போது, தாய் கழுகு அந்த வழியாய் பறந்து வர நேரிட்டது. அது அவ்விதம் பறந்து வந்தபோது, அதன் பெரிய நிழல் கொல்லைப்புறத்தின் மேல் விழுந்தது. அது கீழே பார்த்தபோது, தனக்குச் சொந்தமானதை அது அடையாளம் கண்டு கொண்டது. அது அதைப் பார்த்து க்ரீச் என்று சத்தமிட்டது. அவ்விதம் அது செய்த போது, கழுகுக் குஞ்சு தலையைத் திருப்பி மேல் நோக்கத் தொடங்கினது. அது மேலே பார்த்தபோது, தாய் கழுகு குஞ்சை நோக்கி சத்தமிட்டு "இங்கு வர், நீ கோழிக் குஞ்சு அல்ல. நீ அந்த இடத்துக்குரிய வனல்ல, நீ எனக்கு சொந்தமானவன்" என்றது அந்த கழுகுக் குஞ்சு என்ன செய்வதென்று வியந்தது. ஏனெனில் அதைதான் அது விரும்பினது. ஸ்தாபனக் கொல்லை புறங்களில் நீண்ட நாட்களாக நடந்து கொண்டிருக்கும் அநேக கழுகுகள் நான் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருக்கக் கூடும் அவர் உங்களை அழைத்து, "நீ எனக்குச் சொந்தமானவன்” என்றுரைப்பார் என்று எண்ணுகிறேன். தாய் கழுகு கழுகுக் குஞ்சை நோக்கி, "நீ முதன் முறையாகத் தாவி உன் செட்டைகளை அடி" என்றது. அதுவும் முதன் முறை யாகத் தாவி தன் செட்டைகளை அடித்தபோது, அது பூமிக்குரிய பறவை அல்ல என்பதைக் கண்டு கொண்டது. ஏனெனில் அப் பொழுது அது கொல்லைப்புறத்திலுள்ள சற்று உயரமான ஒரு கம்பத்தின் மேல் அமர்ந்திருந்தது. தாய் கழுகு. "மகனே, மற்றும் ஒரு முறை தாவி வா, நான் உன்னை என் செட்டைகளின் மேல் சுமந்து செல்வேன்" என்றது. ஜீவனுள்ள தேவனுடைய சபை செய்ய வேண்டியது என்னவெனில், அது எல்லா ஸ்தாபனக் கொள்கைகளையும், தத்துவங்களையும் விட்டு உயரத் தாவி, அவை களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதே. கூட்டைக் கலைக்கும் நேரம் ஏற்கனவே வந்துவிட்டது. நமக்கு இன்னும் ஒரு தாவு அவசியம். நாம் கொல்லைப்புற கம்பம் வரைக்கும் வந்துவிட் டோம், ஆனால் நாம் விடுதலையடைந்து அவருடைய செட்டைகளின் மேலேறி முதன் முறையாகப் பறக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். வாழ்க்கையின் எல்லா துறைகளிலும் தேவனுக்கு பிள்ளைகள் உள்ளனர் என்பதைக் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறான். அவர்கள் இயேசு கிறிஸ்துவின் வல்லமையுடன் கூடிய சுவிசேஷத்தைக் கேட்கும் போது, அது அவருடைய சத்தம் என்பதை அவர்கள் அறிந்து கொள்கின்றனர். ஒரு பெரிய ஸ்தாபனத் தலைவரைக் கொண்டவனாய் நான் குனிந்து கீழே பார்த்துக் கொண்டிருந்தேன் ஆனால் ஒரு நாள் நான் மேலேயிருந்து வந்த ஒரு சத்தத்தைக் கேட்டேன் அது தலைமை அலுவலகத்திலிருந்தோ, போதகரிடத் திலிருந்தோ , கேன் குழுவிலிருந்தோ, பேராயரிடத்திலிருந்தோ வந்த சத்தம் அல்ல. நான் பரலோகத்திலிருந்து உண்டான ஒரு சத்தத் தைக் கேட்டேன. அது எவ்வளவாக என் இருதயத்தை சிலிர்க்கச் செய்தது! தொல்லை என்னவெனில், தானியக் களஞ்சியக் கொல்லைப்புறக் கோழிக் குஞ்சுகள், அவை எதற்காக களக் கென்று சத்தமிட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை அறியாமலிருக்கின்றன. அவை கழுகுகள் அல்ல, அவை தேவனுடைய வல்லமையை ஒருபோதும் பரிசோதித்து உணராத தானியக் களஞ்சியக் கொல்லைபுறக் கோழிக் குஞ்சுகளே. அவை ஒருபோதும் தெய்வீக சுகம் பெறவில்லை அந்த மகத்தான பரிசுத்த ஆவியினால் ஆசிர்வதிக்கப்படவில்லை அவை ஒரு போதும் ஆவியில் நடனமாடவில்லை, ஆவியால் நிறைந்து அழவில்லை. ஆனால் ஒரு கழுகு இவையனைத்தையும் இதைக் காட்டிலும் அதிகமும் பெற்றுள்ளது. அது உயர எழும்பி எழும்பி பரலோக ஆதிக்கத்துக்குள் செல்கிறது. பெந்தெகொஸ்தே ஜனங்களே, இந்தவிடத்தில் உங்களுக்கு ஒன்றை சுட்டிக் காட்ட விரும்புகிறேன் கழுகின் பாடத்தைக் கொண்டு ஒரு எளிய சத்தியத்தை நான் எடுத்துரைக்கப் போகிறேன் தாய் கழுகு மிகவும் ஞானமுள்ளது. அதன் குஞ்சு வாழ்நாள் பூராவும் கூட்டில் வாழ முடியாது என்பதை அது அறிந்துள்ளது. அது கூட்டை விட்டு வெளியே வந்து, வேலை செய்து, எல்லாவற் றையும் தானாகவே செய்ய வேண்டும் என்று தாய் கழுகுக்கு தெரியும். கழுகுக் குஞ்சு கூட்டில் வசிக்கும் போது எல்லாமே மிகவும் மிருதுவாக உள்ளது. அது ஆட்டுத் தோலின் மேல் சுற்றி சுற்றி நடந்து வருகிறது. அது ஒவ்வொரு நாளும் தாய் கழுகினால் போஷிக்கப்படுகிறது. அதற்கு உலகில் எந்த கவலையும் இல்லை. அது கூட்டில் மிகவும் சந்தோஷமாக உள்ளது - பரிசுத்த ஆவியை சமீபத்தில் பெற்று உலகத்தையே அசைத்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் ஒருவனைப்போல . ஆனால் அப்படிப்பட்ட ஒருவன் வாழ்நாள் முழுவதும் கூட்டிலேயே தங்கியிருந்து, தான் பெற்றுள்ள ஆசிர்வாதங்களைக் கொண்டு வாழ முடியாது. அது தான் பெந்தெகொஸ்தே சபையின் காரியமாயுள்ளது. பெந்தெகொஸ்தே கழுகுகளே, கேளுங்கள்! நீங்கள் நீண்ட காலம் கூட்டில் வசித்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த மகத்தான தாய் கழுகு செய்யப்போகும் செயலுக்கு இணங்குங்கள். அது கூட்டுக்கு வந்து அதன் பெரிய அலகினால் கூட்டில் மிருதுவாயும் குஞ்சுகளுக்கு சௌகரியமாயும் உள்ள அனைத்தையும் பிய்த்து எறிந்து விடத் தொடங்குகிறது. அது ஆட்டுக்குட்டியின் தோலையும், முயலின் தோலையும், மிருதுவாக்குவதற்காக அது வைத்திருந்த மற்றெல்லா வற்றையும் தூர எறிந்துவிட்டு, குஞ்சுகளுக்கு உட்காரவும் கூட முடியாத அளவுக்கு கடினமுள்ளதாக அதை செய்து விடுகிறது. குஞ்சுகள் உட்கார்ந்தால், அவை குச்சிகளின் மேல், அல்லது முட்களின் மேல்தான் உட்கார வேண்டும். அல்லது அங்கு வைக்கப் பட்டுள்ள கல் அவைகளை உறுத்தும். ஒரு செயலைப் புரிய தேவன் உங்களை அடிபணியச் செய்வார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அது நம்மில் அநேகருக்கு நேர்ந்துள்ளது. அழகான சிறகுகள் கொண்ட நம்முடைய சபைகளில் நம்மை மிருதுவாக்கும் அனைத்தையும் அவர் இழுத்து தூர எறிந்து விடுகிறார். அவர் சிறகுகளை காற்றினால் போக்கி விடுகிறார். விரை வில் நமக்கு கஷ்டமும் சலிப்பும் உண்டாகிறது. பெந்தெகொஸ்தே சபைக்கு எப்பொழுதாகிலும் அசௌகரியமும் சலிப்பும் ஏற்பட வேண்டுமானால், அது இப்பொழுதே என்று நான் நினைக்கிறேன். நாம் நிச்சயமாக நமது கூட்டை மிருதுவாக்கிக் கொண்டோம். ஓ, ஆமாம்! ஆனால் தேவன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என் பதைப் பாருங்கள்! அவர் நமது கூடுகளை பிய்த்து எறிகிறார், அவர் அதை நிச்சயம் அசௌகரியமுள்ளதாகச் செய்கிறார். அவர் ஏன் அவ்விதம் செய்கிறார்? உங்கள் ஸ்தாபனங்களை நீங்கள் விட்டு விலகி தனியே புறப்பட்டுச் செல்ல உங்களை அடிபணியச் செய் வதற்காகவே - தாய் கழுகு கூட்டை கலைத்து, குஞ்சுகள் தங்கு வதற்கு கடினமுள்ளதாக அதை செய்து, அவை கூட்டில் வசிக்கப் பிரியப்படாமல், வெளியே புறப்பட்டு சென்று அவைகளுக்கு சொந்தமான வானத்திற்கு உயர எழும்பிச் பறப்பது போல. நாம் வெளியேறி அவருக்காக புறப்பட்டுச் செல்ல நம்மை அடிபணியச் செய்வதற்கு தேவன் பல வழிகளைக் கையாளுகிறார். அவர் ஒருக்கால் உங்களுக்கு அன்பார்ந்தவரை உங்களிடமிருந்து எடுத்துக் கொள்ளக்கூடும். நீங்கள் வியாதியினால் பீடிக்கப்பட அவர் அனுமதிக்கக் கூடும். அவர் ஏன் இவ்வாறு செய்ய வேண்டியதுள்ளது என்றால், செய்ய வேண்டிய வேலை ஒன்று உங்களுக்கு உள்ள போது, நீங்கள் ஏதோ ஒரு ஸ்தாபன சபையில் சௌகரியமாக இருந்து கொண்டிருக்கிறீர்கள். அவர் எவ்வளவு சௌகரியமாக அதை உங்களுக்கு அமைத்துக் கொடுத்திருந்தாலும் உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் கூட்டில் வாழ்ந்து கொண் டிருப்பதை அவர் விரும்பவில்லை. நீங்கள் வெளியேறி, நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்ட நிலையில் உள்ளதைக் காட்டிலும் இன்னும் அதிகம் செய்ய வேண்டும் என்னும் ஆவல் உங்களுக்கிருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். நீங்கள் அவருக்காக பணிபுரிய வேண்டுமென்று அவர் விரும்புகிறார் - அதாவது ஒரு கழுகாக நீங்கள் இருந்து கொண்டு, ஒரு குடும்பத்தை நீங்கள் வளர்த்து, மற்ற கழுகுக் குஞ்சுகளை நீங்கள் போஷிக்க வேண்டு மென்று. தாய் கழுகு முதன்முறையாக தன் சிறு குடும்பத்தை பறப் பதற்கு கொண்டு செல்வதற்கு முன்னர், கூட்டுக்கு வந்து அவைகளின் மேல் நிற்கும். அவைகளுக்கு பல தளர்ச்சியான சிறகுகள் உள்ளதை அது கண்டு, தன் பெரிய சிறகுகளை மிகுந்த விசையோடு அடிக்கும். அப்பொழுது சிறகுகள் கூட்டிலிருந்து வெளியே பறக்கும். வெகு விரைவில் தளர்ந்த சிறகுகள் அனைத்தும் கழுகு குஞ்சுகளை விட்டு பறந்து சென்று விடும். இன்றைக்கு நமது மகத்தான தாய் கழுகு (யேகோவா) தம்முடைய ஸ்தானத்தை பெந்தெகொஸ்தே கூட்டுக்கு மேல் எடுத்துக் கொண்டு, சபையில் காணப்படும் தளர்ச்சியான சிறகுகளைப் போக்கடிக்க தம்முடைய மகத்தான செட்டைகளினால் மிகுந்த விசையோடு அடித்துக் கொண்டிருக்கிறார். தளர்ந்த சிறகுகளைக் கொண்டு பெந்தெ கொஸ்தே சபை தேவனிடம் பறந்து செல்ல முடியாது. ஒரு பெந்தெகொஸ்தே ஸ்திர்க்கும் உலகப்பிரகாரமான சபையைச் சேர்ந்த நவீன ஸ்திரீக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க இயலாத நிலைக்கு அது வந்துவிட்டது. பெந்தெகொஸ்தே ஸ்திரீ தன் தலை மயிரைக் கத்தரித்துக் கொள்கிறாள், 2டலுடன் ஒட்டிக் கொள்ளும் இறுக்கமான உடைகளை உடுத்திக் கொள்கிறாள், 'மேக் அப்' போட் டுக் கொள்கிறாள். காரணம் என்ன? நான் சொல்கிறேன் - மிக அதிகமான தளர்ந்த சிறகுகள், நவீன ஹாலிவுட் பாணியில் பிரசங்கிக்கும் மனிதர்களே, உங்களுக்கு அவமானம். நீங்கள் அவ்வளவு தாழ்ந்த நிலையில் பறந்து, நீங்கள் பிரசங்கிப்பதை பிரங்கிப்பதற்கு, உங்களுக்கு தளர்ந்த சிறகுகள் நிறைய இருக்க வேண்டும். தொலைகாட்சியைக் காணும் சபை அங்கத்தினர்களே, நீங்கள் ஆர்தர் காட் ஃப்ரே, எல்விஸ் பிரஸ்லி போன்றவர்களின் நிகழ்ச்சிகளையும், அது போன்ற மற்ற தேவபக்தியற்ற காரியங்களையும் தொலைகாட்சியில் கண்டு களிக்கிறீர்கள். உங்கள் சிறகுகள் மிகவும் தளர்ந்துள்ளன. இதற்கு பிறகு, உங்களால் ஏன் பரிசுத்த ஆவியினால் பறந்து செல்ல முடிய வில்லை என்று வியக்கிறீர்கள். தேவன் ஏன் சபையில் வரங்களைப் புதுப்பிக்கவில்லை என்று நீங்கள் வியக்கிறீர்கள். அதன் காரணம் என்னவென்று நான் கூறுகிறேன். வரங்களைப் புதுப்பிப்பதற்கு தேவனுக்கு சபையில் யாருமே இல்லை. சத்தியத்தைப் பிரசங்கிக் காத தளர்ந்த சிறகுகளைக் கொண்ட பிரசங்கிமார்களே, உங்களுக்கு அவமானம்! இதை ஞாபகம் கொள்ளுங்கள், உங்களுக்கு தானியக் களஞ் சியக் கொல்லைபுறத்தில் கோழிக் குஞ்சுகளுடன் தங்கியிருக்க பிரியமில்லை என்றால், நீங்கள் புத்தி தெளிவடைவது நல்லது. தரையிலிருந்து உயரப் பறக்க, கோழிக் குஞ்சுகளுக்கு போதுமான சிறகுகள் கிடையாது. பெந்தெகொஸ்தே சபைகளாகிய உங்க ளுக்கும் அவ்வளவு பெலன் தான் உள்ளது. நீங்கள் தேவனுடன் செல்லவில்லை என்றால், தேவனுடைய ஆழமான காரியங்களில் முதற்கண் விசுவாசம் கொண்டிராத ஒரு சபையைப் போலவே நீங்களும் கேடுள்ளவர்களாயிருப்பீர்கள். சபைபறக்க வேண்டியது அவசியம், நாம் அறிந்திராத, அடையாத் ஸ்தலங்களுக்கு போக வேண்டியது அவசியம். தானியக் களஞ்சியக் கொல்லைபுறத்தில் நடந்தால் போதுமென்று திருப்தி யடைந்து விடாதீர்கள். பரலோக ஆதிக்கங்களுக்கு உயர எழும் பிச்செல்ல நாம் ஆயத்தமாவோம். தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் சிறு கோட்பாடுகள், உபதேசங்கள் போன்ற தளர்ந்த சிறகுகளைக் கொண்டு அதை செய்ய முடியாது. தேவன் உங்கள் தேவன் என்றும், நீங்கள் அறிந்திராத ஆதிக்கங்களுக்கு பறந்து செல்ல அவர் விரும்புகிறார் என்றும் உங்களை அறியச் செய்வதற்கு, அந்த அககினி உங்களுக்குள் இரவும் பகலும் எரிந்து கொண்டிருக் கட்டும். இதை அறிந்து கொள்ளுங்கள். தமக்கு சொந்தமான வர்களை யாரும் அவருடைய கரங்களிலிருந்து பறித்துக் கொண்டு போய்விடக் கூடாது என்பதற்காக அவர் இரவும் பகலும் அவர்கள் மேல் கண்ணோட்டமாயிருக்கிறார். எழுந்து நில்லுங்கள், அவருக்காக எழுந்து நில்லுங்கள். நாம் எழுந்து நின்று நம்முடைய தளர்ந்த சிறகுகள் அனைத்திலுமிருந்து நம்மை சுத்திகரிக்க தேவனை அனுமதிப் போமானால், பரலோகத்திலிருந்து பலத்த காற்று அடிக்கிறது போன்ற ஒரு முழக்கம் உண்டாகி, ஆதி காலத்து சபை செய்தது போல் நாம் முன் செல்வோம். தேவனுடைய கழுகுகளைப் போன்று நீங்களும் பரலோக ஆதிக்கங்களுக்கு செல்ல விரும்பினால், அவ்விதம் செய்ய நீங்கள் செயல்பட வேண்டும். ஸ்தாபன சபை உங்களுடன் செல்ல மறுத்தால், நீங்கள் அதை விட்டு வெளியே வர வேண்டும். நீங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு, அவரை நோக்கி உங்களால் முடிந்தவரை உயர குதிக்க வேண்டும். அப்பொழுது அவர் பலத்த காற்றுடன் உங்களுக்காக கீழே துரிதமாக இறங்கி வந்து, உங்களைச் சுமந்து கொண்டு மேலே செல்வார். நீங்கள் யேகோவாவின் செட்டைகளின் மேல் ஏறிக்கொண்டு உயரச் செல்ல வேண்டும். நீங்கள் இதுவரையிலும் ஸ்தாபனக் கூட்டிலிருந்து வெளியே வரா மல் இருந்திருப்பீர்களானால், அதிலிருந்து வெளியே வந்து அவரு டைய பரந்த இராஜ்யத்தில் பறந்து செல்வதற்கு உங்களுக்கு நேரம் வந்துவிட்டது. அவர் உங்களுக்கு என்னவெல்லாம் வைத்திருக் கிறாரோ, அவருடைய இராஜ்யத்தில் என்னவெல்லாம் உள்ளதோ, அதை அறிந்து கொள்ள நேரம் வந்துவிட்டது. நண்பனே, ஸ்தாபன சபைகளில் அங்கத்தினராயிருப்பதை விட மேலான காரியங்கள் உண்டு . கழுகு தன் கூட்டைக் கலைப்பது போல், சில நேரங்களில் தேவன் சபையில் அதையே செய்கிறார். ஏதோ ஒன்றின் பேரில் நாம் திருப்தியடைந்தவர்களாய் இருக்கும் போது, தேவன் கூட்டை அசைக்கிறார். அவர் கத்தோலிக்க மார்க்கத்திலிருந்து லூத்தரை வெளிகொணர்ந்தார். அவர்கள் விறைப்பான நிலையை அடைந்த போது, தேவன் கூட்டை குலுக்கி, ஜான் வெஸ்லியை அனுப்பினார். இவர்களும் விறைப்பான நிலையை அடைந்தபோது, அவர் ஃபின் னியை அனுப்பினார். இது மறுபடியும் கூட்டை குலுக்கும் நேரம், ஏனெனில் நாம் மறுபடியும் நமக்குள்ளதன் பேரில் திருப்தி யடைந்தவர்களாய் காணப்படுகிறோம். அவர் பலத்த காற்றை அனுப்பி எல்லா தளர்ந்த சிறகுகளும் பறந்து செல்லும்படி செய்கிறார். நீங்கள் கர்த்தருக்கென தனியாக பறந்து செல்லும்போது, உங்களுக்கு தளர்ந்த சிறகுகள் இருக்கக் கூடாது. தேவன் கூட்டை குலுக்கி, பெந்தெகொஸ்தே நாளில் அவர் செய்தது போல், பலத்த காற்றடிக்கிற முழக்கத்துடன் இறங்கி வருகிறார். அப்பொழுது தளர்ந்த சிறகுகள் அனைத்தும் பறந்து போகும். அவர் பெந்தெகொஸ்தே எழுப்புதலை அனுப்பி கூட்டை அசைக்கிறார். அசைவின் நேரம் ஒன்று வருவதை நீங்கள் காணும் போது, கழுகுகள் ஆசிர்வாதத்துக்கு ஆயத்தமாயுள்ளன. சபை ஏதோ ஒன்றுக்கு ஆயத்தமாயுள்ளது. நமது செட்டைகளை நாம் தேவனுடைய வாக்குத்தத்தத்தில், அவருடைய வார்த்தையில் விரிப்போமாக. விசுவாசத்தினால் பரி சுத்த ஆவியானவர் நம்மை உயரத் தூக்கி செல்வாராக ஆமென். நேற்று மாலை 'சுவற்றில் கையுறுப்பு' என்னும் பொருளின் பேரில் பேசுவதற்கு தேவனால் என் இருதயத்தில் ஏவப்பட்டேன். கர்த்தர் நம்மை உண்மையாகவே ஆசிர்வதித்தார். நான் பேசு வதற்கென பரிசுத்த ஆவியானவர். என்னை அபிஷேகித்து நமக்கு வெளிப்படுத்தின காரியங்களைக் குறித்து நான் அதிசயிக்கிறேன். நீங்களும் மிகவும் சமீபமாயுள்ள தேவனுடைய காரியங்களைக் கேட் டீர்கள். நேற்றிரவு நான் எவ்விதம் பழைய ஏற்பாட்டின் மகா பாபிலோனை ஒப்பிட்டு, அவர்களுக்கு சுவற்றில் கையுறுப்பு தோன்றின போது இருந்த அதே சூழ்நிலையில் நாம் இருக்கிறோம் என்பதைக் கண்டோம் என்பது உங்களுக்கு நினைவிருக்கும். இன் றைக்கு அமெரிக்காவில் அன்றிருந்த அதே சூழ்நிலை நிலவுகிறது. நமது ஒழுக்கம் மிகவும் தாழ்ந்த நிலையிலும், பலவீனமாகவும் உள்ளது. நாம் மதுபானம் அருந்தி, ஸ்திரீகளை நமது தெய்வமாகச் செய்திருக்கிறோம். அவர்கள் அன்று செய்த விதமாகவே, இன்று நாம் செய்வதைக் காண்கிறோம். நமது நாட்களும் கூட எண் ணப்பட்டுள்ளன என்பதை எவ்வித சந்தேகமுமின்றி நாம் அறிந் திருக்கிறோம். நாம் தராசில் நிறுக்கப்பட்டு குறைவுள்ளவர்களாக காணப்பட்டுள்ளோம். பாவம் என்பது எல்லாவிடங்களிலும் எல்லா காலங்களிலும் ஒன்றேதான். நீங்கள் பாவம் அழகாகக் காணும்படி செய்து, அதை பகட்டினால் மூடி உடுத்தினாலும், பாவம் அப்பொழுதும் பாவம்தான். பாவம் எல்லாவிடங்களிலும் சிதறிக் காணப்படுகிறது. ஏனெனில் இங்குள்ள அமெரிக்க மக்களின் கண்களில் அது பகட் டாக காணும்படி செய்யப்பட்டுள்ளது. நான் சிறுவனாயிருந்த போது அந்த மதுபானம் 'மூன்ஷைன்' (moonshine) என்றும் 'ஓல்ட் சார்லி பார்லிகார்ன்' (Old Charlie Barleycorn) என்றும் அழைக் கப்பட்டது எனக்கு ஞாபகமுள்ளது. இன்றைக்கோ அது புதுமை யான குப்பிகளில் அழகான பெயர் சூடப்பட்டு கவர்ச்சியான நிறங் களில் உள்ளது. ஆனால் அது பிசாசின் பழைய மதுபானமே. புகையிலையை பாருங்கள், அநேக ஆண்டுகளுக்கு முன்பு, பாட் டிக்கு பல்வலி எடுத்தால் சோளக் குழாயை எடுத்து புகையிலையை நிறைத்து புகை பிடிப்பது வழக்கம். ஆனால் அந்த பிசாசு இன்று எல்லாருக்கும் எவ்வளவு அறிமுகமானவனாகி விட்டான் பாருங்கள். தாய்மாரர்கள், குமாரத்திகள், சிறு பிள்ளைகளும் கூட இன்று புகை பிடிக்கின்றனர். அப்படி செய்வது இன்று புகழ்ச்சியாக உள்ளது, ஆனால் அது பாவமே. அது மற்றொரு பெயரால் மூடி மறைக்கப்பட் டுள்ளது. ஜனங்கள் சூதாடுவது முன்காலத்தில் தவறான செயலாக எண்ணப்பட்டு வந்தது, சூதாடுவதற்கென ஒருவன் பெயர் கெட்ட இடத்துக்கு செல்ல வேண்டியிருந்தது. ஆனால் தற்பொழுது பாருங்கள் ! முன் காலத்திலெல்லாம் மதுபானம் விற்கும் ஸ்தலங் களை கடந்து செல்லாமலிருக்க, பெண்கள் வீதியின் மறுபுறம் சென்று நடந்து செல்வது வழக்கம். ஆனால் இன்று என்ன நடக்கிறதென்று பாருங்கள் ! அவள் மதுபானக் கடையில் போடப்பட்டுள்ள கம்பி களின் மேல் கால்களை நீட்டி, வீட்டில் குழந்தைகளை தாதிகளின் பாதுகாப்பில் விட்டு விட்டு வந்து, ஒரு தாயாக இருப்பதற்கு பதி லாக மதுபான கடையில் மது அருந்திக் கொண்டிருக்கிறாள். அவள் இப்பொழுது மிகவும் கீர்த்தியுள்ளவளாய் இருக்கிறாள். அது எவ்வளவு புகழ் வாய்ந்ததாக இருந்தாலும், நவீன போக்காக இருந்தாலும், தேவன் பாவத்தை பொறுத்துக் கொள்ள மாட்டார். பாவத்துக்கு மரணம் தேவை, பாவம் செய்கிறவர்கள் தங்கள் அக்கிரமங்களில் ஏற்கனவே மரித்தவர்களாயிருக்கின்றனர். இன்று நமக்கு தொல்லை விளைவிக்கும் பெரிய பொல்லாங் கான காரியங்களை நாம் நோக்கும்போது, மறுபுறத்திலிருந்து நியாயத் தீர்ப்பு இந்நாட்டுக்கு வந்து கொண்டிருப்பதை நாம் காணலாம். ஏனெனில் நாம் பாவம் செய்து தப்பித்துக் கொள்ள தேவன் விட மாட்டார். நாம் வாழ்ந்து கொண்டுள்ள விதமாக பாவத்தில் வாழ்ந்து, தேவன் நம்மை தப்ப விடுவாரானால், அவர் நீதியுள்ள தேவன் அல்ல. நம்முடைய பாவங்களுக்கு கணக்கு கொடுக்கும் படி அவர் செய்வார். நான் முன்பு சொன்னதை மறுபடியும் சொல்லுகிறேன். நீதியுள்ள பரலோகத்தின் தேவன், நாம் பாவம் செய்து தப்பித்துக் கொள்ள விடுவார் என்றால், அவர் சோதோம் கொமோராவை எழுப்பி அவைகளை அழித்து போட்டதற்காக அவர்களிடம் மன்னிப்பு கோர வேண்டியவராயிருக்கிறார். ஏனெ னில் நாம் அவர்களைப் போல் அல்லது அவர்களை விட மோச மானவர்கள். ஜீவனுள்ள தேவனுடைய ஆவியை தன் இருதயத்தில் பெற்றுள்ள எவனும், வரப் போகும் வெப்பமான கொடுங்காற்றாகிய நியாயத் தீர்ப்பு இவ்வுலகத்தை தாக்கவிருக்கிறது என்பதை நிச்சயம் அறிந்து கொள்வான். ஏதோ ஒன்று நடக்கவிருக்கிறது என்பதை நீங்கள் ஆவியில் பகுத்தறிந்து உணர்ந்து கொள்வீர்கள். முழு உலகமே சிறு நாடுகள், பெரிய நாடுகள் அனைத்துமே - நடுங்கிக் கொண்டு, கவலையில் ஆழ்ந்துள்ளது. ஏனெனில் இவ்வுலகத்தை ஒரு நிமிடத்தில் சாம்பலாக்கி விட கம்யூனிஸ்டுகள், தேவனற்றவர்கள், பொல்லாங்கான, சீர்குலைந்த மனிதரின் கரங்களில் அதிகாரம் அடங்கியுள்ளது. அவர்கள் அவ்விதம் செய்யாமல் தடுப்பது தேவ னுடைய இரக்கமும் நீடிய பொறுமையுமே. அவர்கள் அவ்விதம் செய்ய அவர் அனுமதிக்க மாட்டார்.அதை நாம் நினைவில் கொண்டவர்களாய், அவருடைய சபையின் மீது அவர் வைத்துள்ள அவருடைய திவ்விய பாதுகாப்பனிமித்தம், நாம் தேவனுக்கு நன்றி யுள்ளவர்களாயிருத்தல் அவசியம். அதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். காலை எழுவதற்கு முன் நாம் ருவியாவினால் கைப்பற் றப்பட்ட ஒரு நாடாகி விடக் கூடும். இருப்பினும் நாம் கவலை யற்றவர்களாய் சென்று கொண்டிருக்கிறோம். உலகம் பயந்த சுவாப நிலையை அடைந்துள்ளது, மனோதத்துவ நிபுணர்களும் கூட நரம்பு தளர்ச்சி அடைந்துள்ளனர். விஞ்ஞானி களான மேதாவிகள் என்ன நடக்கிறதென்று அறியாமல் உள்ளனர். பொல்லாத சக்தியினால் ஏற்பட்டுள்ள நரம்பு சம்பந்தமான பேராட் டத்தின் விளைவினால் அவர்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். நீங்கள் காணும் ஒவ்வொரு நகரமும், ஒவ்வொரு பண்ணையும். ஒவ் வொரு இடமும் அந்தகாரமென்னும் அதே பொல்லாத சூழ்நிலை யினால் சூழப்பட்டுள்ளன. அது இரக்கமின்றி பூமியை சூழ்ந்துள்ளது. ஆனால் ஆவியினால் நிறையப்பட்ட ஒவ்வொரு தேவனுடைய பிள்ளை யும் என்ன நடக்கிறதென்று அறிந்திருக்கிறான். அவன் விடையை அறிந்திருக்கிறான். கர்த்தர் சீக்கிரமாய் வருகிறார், தேவனுடைய வார்த்தை துரிதமாக நிறைவேறி வருகிறது. உண்மையில் மறுபடி யும் பிறந்த ஆவியில் நிறைந்த, ஆவியினால் நடத்தப்படுகின்ற கிறிஸ்தவன் மட்டுமே இந்த நேரத்தில் தன்னை இது அனைத்துக்கும் மேலாக உயர்த்திக் கொள்ள இயலும். உலகம் ஏதோ தவறுண்டு என்பதை அறிந்து சஞ்சலமடைந்துள்ளது. ஆனால் அதனால் விடை காண முடியவில்லை. ஏனெனில் விடையை அறிந்து கொள்ள அவர்களுக்கு வெளிச்சமில்லை. எனவே அவர்களைப் பீடித்துள்ள நரம்பு தளர்ச்சியிலிருந்து தப்பித்துக் கொண்டு அதை மறக்க எண்ணி அவர்கள் ராக் அண்டு ரோல் நடனத்தில் மகிழ்ச்சியான நேரத்தை அனுபவிக்கின்றனர். பின் மாற்றமடைந்துள்ள குளிர்ந்த, சம்பிரதாய சபைகள் (பெந்தெகொஸ்தேகாரர் உட்பட) தங்களைத் தொந்தரவு செய்கின்ற பொல்லாங்கிலிருந்து தங்கள் சிந்தைகளை எடுத்துப் போட வேறு வழிகளைக் கண்டு பிடிக்கின்றனர். ஏனெனில் இதி னின்று தப்பித்துக் கொள்ளும் வழியை தேவனிடமிருந்து பெற அவர்கள் தவறிவிட்டனர். உலகத்தை கஷ்டத்துக்குள்ளாக்கும் இந்த பொல்லாப்பை எடுத்துப் போட அவர்கள் தேவனிடம் முறையிடு வதற்குப் பதிலாக, அவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டு, இரவு உணவு தையல் விருந்துகள் போன்றவைகளில் பங்கு கொண்டு, நீச்சல் கடற்கரைகளுக்கும், உலகப் பிரகாரமான மக்கள் கூடும் இடங்களுக்கும் சென்று, பூக்கள், நீலப்பறவைகள் போன்றவை களின் பேரில் பிரசங்கித்து, உண்மையான விஷயங்களையும் தேவனுடைய ஆசீர்வாதங்களையும் ஒரு புறம் தள்ளி வைத்து விட்டனர். தேவனால் சுகமளிக்க முடியும், அவரால் அற்புதங்களை செய்ய முடியும், மரித்தோரை உயிரோடெழுப்ப முடியும் போன்றவை களையும் இன்னும் மற்ற சாத்தியங்களையும் அவர்கள் பிரசங்கிப்பதை நிறுத்திவிட்டனர். இவைகளைக் குறித்து ஆணித்தரமாக பிரசங்கிக்க வேண்டிய இந்நேரத்தில் அவர்கள் ஒரு வார்த்தையும் கூறுவதில்லை. ஏன்? ஏனெனில் அவர்கள் பின் மாற்றம் அடைந்துள்ளனர். அவர்கள் தேவனைப் பற்றிக் கொண்டு ஜெபம் செய்வதற்குப் பதிலாக ஜெபக் கூட்டங்கள் நடத்துவதை நிறுத்தவிட்டனர். அவ்விதம் அவர்சள் செய்த போது அதற்கு பதிலாக அவர்கள் சமுதாய தையல் கூட்டங் களையும் கால்ஃப் விளையாட்டையும் ஏற்படுத்த வேண்டியதாகிவிட் டது. நீங்கள் இவ்வுலகின் பொல்லாப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள விரும்பினால், தேவனைப் பற்றிக் கொள்ளுங்கள், அதை விட்டு விடாதேயுங்கள். முன்னைக் காட்டிலும் இப்பொழுது மிகவும் அந்த காரமாக காணப்படக்கூடும். ஆனால் நீங்கள் ஜெபம் செய்து தேவனைத் தேடாமல் போனால், உங்களுக்கு பதிலே கிடைக்காது. பரிசுத்தவான்களே, தேவனைப் பற்றிக் கொண்டேயிருங்கள். உங்க ளுடைய ஸ்தாபனம் அதைக் கைவிட்டு, ஜெபிக்க மறுத்து, இந்த மணி நேரத்தின் தேவனுடைய பரிபூரணத்துக்கு செவி கொடுக் கவும், வெளிப்படையான சத்தியத்தை சந்திக்கவும் மறுத்தால், உங்கள் சபையைவிட்டு விலகி தேவனைப் பற்றிக் கொண்டுள்ள சபையைத் தேடிக் கண்டுபிடியுங்கள். நீங்கள் தொடர்ந்து ஜெபிப்பதற்கு பதிலாக, ஜெபத்தை விட்டு வெளியேறி விட்டீர்கள். பலவீன முதுகு கொண்ட கிறிஸ்தவர்களே, உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் ஜெபம் செய்யாதபடிக்கு உங்களுக்கே தடை விதித்துக் கொண்டீர்கள். அவ்விதம் செய்வது நிச்சயம் எளிதான செயலே. உலகத்திலிருந்து உங்களுக்கு அதிக இறுக்கம் உண்டாகாது என்று நீங்கள் எண்ணிக் கொண்டீர்கள். ஆனால் இந்நாட்களில் ஒன்றில் உங்களுக்கு மிகவும் அதிகமாக இறுக்கம் உண்டாகப் போகிறது. அப்பொழுது, நீங்கள் விதித்துக் கொண்ட தடையினால் நியாயத் தீர்ப்பை அடைவதைப் பார்க்கிலும் தடை விதித்துக் கொள்ளாமல் இருந்திருப்பது நலமாயிருந்திருக்கும் என்பதை உணருவீர்கள். அந்த அருமையான யோசேப்பைக் குறித்து நீங்கள் எப்பொழுதாகிலும் சிந்தித்ததுண்டா? அவன் சிறைச்சாலையில் போடப்பட்ட போது ஜெபம் செய்வதை நிறுத்தியிருந் தால் என்னவாயிருக்கும்? புறக்கணிக்கப்பட்டதன் காரணமாக தேவனை விட்டு விலகி ஜெபம் செய்யாமலிருக்க யாருக்காகிலும் உரிமை இருக்குமானால் அது யோசேப்பே. அவன் பாவத்துக்கு எதிரான ஒரு நிலையைக் கடைபிடித்ததன் விளைவாக சிறைச்சாலையில் போடப்பட்டான். தேவனுக்கென்று அவன் ஒரு தைரியமான. விசுவாசமுள்ள நிலையைக் கடைபிடித்திருக்கும்போது, அவனைச் சிறைச்சாலையில் போட தேவன் எவ்விதம் அனுமதிப்பார்? அப்படிப் பட்ட ஒரு காரியம் நிகழ்ந்த பிறகு, அவரை எதிர்த்து குளிர்ந்த நிலைக்கு பின்வாங்கிப் போக யோசேப்புக்கு நிச்சயமாக உரிமை இருந்தது. அவன் அவ்விதம் செய்திருக்கலாம், ஆனால் அவனோ அப்பொழுதும் ஜெபம் செய்து, இயற்கைக்கு மேம்பட்ட ஒன்று நடக்கும் என்று விசுவாசித்து, அவனை வெளியே கொண்டு வர தேவனுடைய பலத்த கரத்தை எதிர்நோக்கியிருந்தான். ஹாலிவுட் பாணியில் அமைந்துள்ள பெந்தெகொஸ்தே பிரசங்கிமார்களாகிய உங்களில் எத்தனை பேர் யோசேப்பைப் போன்று நிலைத்திருப்பீர் கள்? மூன்று ஆண்டு காலமாக அவன் அழுக்கான, பூச்சிகளால் நிறைந்த குகையில் போடப்பட்டு, பொல்லாங்கு சிந்தை கொண்ட மனிதர் அவனுக்கு கூட்டாளிகளாக இருந்தனர். அதை சிந்தித்துப் பாருங்கள் -- மூன்று ஆண்டு காலம், ஆனால் அவனோ தேவனைப் பற்றிக் கொண்டிருந்தான், அவன் ஜெபத்தில் தரித்திருந்தான். அவன் ஒரு போதும் தளரவேயில்லை. வாரங்கள் கடந்து மாதங்களாயின, மாதங்கள் கடந்து ஆண்டுகளாயின, இருப்பினும் தேவன் அவனை வெளியே கொண்டு வரவில்லை. ஓ, அவன் வேண்டுமானால் ஜெபம் செய்வதை கைவிட்டிருக்கலாம், ஆனால் யோசேப்பு அவ்விதம் செய்யவில்லை. அவன் மறுபடியும் பிறந்தவன், அவனால் அதை கைவிட முடியவில்லை. அவனுக்குள் இருந்த ஏதோ ஒன்று யோபு சொன்னது போல் அவர் என்னைக் கொன்று போட்டாலும், அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன்" என்று கூக்குர லிட்டது. அவன் மூன்று நீண்ட ஆண்டு காலமாக அதில் நிலைத்திருந் தான், அப்பொழுது தேவன் அவருடைய பலத்த கரத்தினால் அவனை வெளியே கொண்டு வந்தார். அவர் இயற்கைக்கு மேம்பட்டதை காண்பித்து யோசேப்பை வெளியே கொண்டு வந்தார். யோசேப்பு அக்குகையை விட்டு வெளிவந்த அன்று முதல். அவன் சென்றவிடமெல்லாம் தேவனு டைய இயற்கைக்கு மேம்பட்ட தன்மை அவனுடன் சென்றது. இன் றிரவு இதைக் கூற விரும்புகிறேன், சபை மட்டும் ஜெபித்துக் கொண்டிருந்து அதில் நிலைத்திருந்தால், ஒரு நாள் அது எழும்பும், தேவன் அதை தமது பலத்த கரத்தால் வெளியே கொண்டு வந்து, பெந்தெகொஸ்தெ நாளில் அவர் செய்தது போல, உன்னதத்தி லிருந்து வரும் பெலனால் அதை தரிப்பித்து, யோசேப்பை போல், தேவனுடைய இயற்கைக்கு மேம்பட்ட தன்மை அவர்களுடன் சென்று அவர்கள் தேசத்திற்குள் பிரவேசிப்பார்கள். நீங்கள் விசுவாசமுள்ள வர்களாய் நிலைத்திருங்கள், சபையே, மீட்பு விரைவில் வரப் போகிறது. என்னை நம்புங்கள், தேவனுடைய ஊழியக்காரன் என்னும் முறையில் நான் உண்மையைப் பேசுகிறேன். ஜீவனுள்ள தேவனுடைய சபை சிறிது காலம் சோதிக்கப்படக் கூடும், மறுபடியும் பிறந்த குமாரரும் குமாரத்திகளும் இவ்வுல கத்திலிருந்தும் அதன் கட்டுகள் அனைத்திலிருந்தும் வெளிவர வேண்டுமென்று பரிசுத்த ஆவியானவரால் வலியுறுத்தப்பட்டு அவர்கள் ஒன்றாக வழிநடத்தப்படுகின்றனர். நாம் தேவனுக்கு செவி கொடுத்தால் மட்டுமே இவ்வுலகுக்கு நேரிட விருக்கும் எல்லா பொல்லாங்கினின்றும் விடுவிக்கப்பட்டு பாதுகாப்பாயிருக்க முடியும் என்று நான் அறிந்திருக்கிறேன். ஆனால் மனிதனோ அதற்கு செவி கொடுக்க மறுக்கிறான், தேவனுடைய எச்சரிப்பின் சத்தம் ஒவ் வொரு நாளும் பேசப்பட்ட போதிலும் மனிதன் பாவத்தில் வாழவே விரும்புகிறான். கிறிஸ்தவனும் அக்கறையின்றி உலகத்தின் காரியங் களுடன் விளையாடிக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. நாம் நினைப்பதைக் காட்டிலும் காலதாமதமாகி விட்டது. ஆனால் அநேகர் இன்னும் அதிக காலம் உண்டென்று எண்ணுகின்றனர். ஆனால் வேத வாக்கியங்களோ வித்தியாசமாக போதிக்கின்றன. "நோவாவின் காலத்தில் நடந்தது போலவும், லோத்தின் நாட் களில் நடந்தது போலவும், மனுஷகுமாரன் வரும் நாளில் நடக்கும் என்று இயேசு கூறினார். நோவாவின் காலத்திலும் லோத்தின் நாட் களிலும் சம்பவித்தது போன்ற அழிவும் நியாயத் தீர்ப்பும் வரப் போவதை நாம் கவனிப்போம். அவர்கள் இருவரும் தேவனுடைய வார்த்தையில் மூன்றாம் அழிவுக்கு உதாரணமாயும் எடுத்துக்காட்டாகவும் உள்ளனர். சோதோம் கொமோராவை அழிப்பதற்கு தேவன் புறப்பட்டு வருவதற்கு முன்பு, பூமியை அவர் ஜலப்பிரளயத்தினால் அழிப் பதற்கு முன்பு, அவர் இரக்கத்தின் அழைப்பு ஒன்றை அனுப்பினார். ஏனோக்கு எவ்விதம் பாவத்துக்கு விரோதமாக பிரசங்கித்தான் என்பதை கவனியுங்கள், தேவன் ஒரு தூதனை அனுப்பினார், அவர் தமது தீர்க்கதரிசியாகிய நோவாவை அனுப்பினார். ஆனால் மனிதர் என்ன செய்தனர்? அவர்கள் புசித்து, குடித்து, கட்டினர். அது "மதுபானம், ஸ்திரீகள், பாடல்" என்பதாய் இருந்தது. அவர்கள் ஏனோக்கு, நோவா இருவரின் செய்தியை புறக்கணித்தனர். ஏனோக்கு. நோவா இவர்களின் செய்தி கிருபை , இரக்கம், மீட்பு என்பதாம். ஆனால் செய்தியானது புறக்கணிக்கப்பட்டு, அவர்கள் தொடர்ந்து பாவம் செய்தனர். இன்றைக்கு சுவிசேஷத்தின் செய்தி யானது அவிசுவாசியை நிர்மூலமாக்கி, விசுவாசியை மகிமையின் ஆதிக்கத்துக்கு கொண்டு சென்று, நியாயத் தீர்ப்பு வருமுன்பு தேவ னுடைய குமாரர்களை எடுத்துக் கொள்ளப்படுதலில் கொண்டு செல் லும், சபையானது அதன் வழியாக பாதுகாப்பாக கொண்டு செல் லப்படும். ஆமென். முடிவு காலம் சமீபமாயுள்ளது என்று எங்கள் இருயத்தில் எழுந்தருளியுள்ள இயற்கைக்கு மேம்பட்ட தரிசனத்தின் செய்தியை நாங்கள் கொண்டு வர முயல்கிறோம். ஆனால் லோத்தின் ஜனங்கள் செய்தது போல், நவீன சபை அதை புறக்கணிக்கிறது. இயற்கைக்கு மேம்பட்டதை லோத்தின் ஜனங்கள் கேலி பரியாசம் செய்தது போன்று, இக்காலத்து ஜனங்களும் செய்கின்றனர். அவர் வருகை சீக்கிரமாயுள்ளது என்பதை சில பிரசங்கிமார்கள் பிரசங்கிக்கா மல், இந்த முக்கியமான பொருளை திசை திருப்பி விடுவதையும், அல்லது அது அடுத்த சந்ததிக்கு உரியது என்று சொல்லி தங் களைப் பின் தொடரும் போதகர்களிடம் அளித்து விடுவதையும் நான் கவனித்திருக்கிறேன். ஆனால் உண்மை என்னவெனில், இதுவே கடைசி சந்ததி என்றும், சபையை தம் வல்லமையால் அபிஷேகிக்க தேவன் இறங்கி வந்துள்ளார் என்றும் என் மனப்பூர்வமாக நம்புகிறேன். "நீங்கள் உலகமெங்கும் போய் சகல சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” என்று இயேசு உரைத்து விட்டு, அடுத்த வசனத்தில், "விசுவாசிகளால் நடக்கும் அடையாளங்களாவன" என்றார். அதை சற்று கூர்ந்து கவனியுங்கள். ஆதி சபைக்குப் பிறகு இருந்த சந்ததிகளில் வேறெந்த சந்ததி இந்த வெளிச்சத்தைப் பெற்று தேவனுடைய கிரியைகளை இவ்வளவு வல்லமையாக செய்துள்ளது? ஆதி சபை இதே ஊழியத்தைப் பெற்றிருந்தது, அதன் பிறகு இருளின் காலங்கள் தொடங்கி நீண்ட காலமாய் இருந்து வந்தது. இப்பொழுது முடிவு சமீபமாயுள்ளது. இயேசுவின் வார்த்தைகள் மறுபடியும் அவருடைய மக்களின் இருத யங்களில் கொழுந்து விட்டு எரியச் செய்யப்படுகிறது. ஏனெனில் அவர், "நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவி சேஷத்தைப் பிரசங்கியுங்கள், அதை செய்த பிறகு முடிவு காலம் வரும்" என்றார். தேவனுடைய சபை அது தொடங்கின போது இருந்தது போல், இப்பொழுது வல்லமையால் தரிப்பிக்கப்பட் டுள்ளதை உங்களால் காண முடியவில்லையா? அவருடைய குமாரர்கள் கிருபை, இரக்கம், மீட்பு செய்தியைக் கொண்டு சென்று கொண்டிருக்கின்றனர், அப்பொழுது வேதாகமம் உரைத் துள்ள அடையாளங்கள் அவர்களைத் தொடருகின்றன - அது மட்டுமல்ல, அவை வானத்திலும் காணப்படுகின்றன. சிறிதளவு ஆவிக்குரிய உள்ளுணர்வு உள்ள எவருமே, தேவனுடைய வார்த் தையை இந்த சந்ததி நிறைவேற்றும் என்பதை அறிந்து கொள்வர். லோத்து நீதிமானாயிருந்தான் என்று வேதம் உரைக்கிறது. ஆனால் அவனுடைய ஜனங்களின் பாவங்களும் சோதோமின் ஜனங்களின் பாவங்களும் அவனுடைய நீதியான ஆத்துமாவுக்கு நாள்தோறும் சஞ்சலத்தை அளித்து வந்தது - இன்றைக்கும் அவ்வாறே உண்மையான தேவ குமாரர்களின் ஆத்துமா சஞ்சலப்படுகின்றது. லோத்து சீர்குலைந்த நிலையையும், மனித உடல் தவறாக உபயோகிக்கப்படுவதையும், போதை மருந்து உபயோகிப்பவர்களையும் குடிகாரரையும், தவறான போக்கில் செல் லும் சிறுவர்களையும் கண்டு சஞ்சலமடைந்தான், ஆனால் லோத்தின் ஜனங்கள் அவனைப் பரியாசம் செய்தனர். அவர்கள் அவனை நம்பவில்லை. ஓ , "இவ்வளவு வல்லமையும் அதிகாரமும் பெரிய பெரிய விஞ்ஞான சாதனைகளையும் பெற்றுள்ள இந்த மகத்தான நகரமாகிய சோதோம் அழிக்கப்படுவது எப்படி?” என்று சொல்லி அவர்கள் லோத்தைப் பரியாசம் செய்வதை என்னால் கேட்க முடிகிறது. அதே போன்று இன்றும் "உலகம் அக்கினியால் எப்படி அழிக்கப்படும்? அது எப்படி முடிவுக்கு வரும்?" என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இவ்விதம் அவர்கள் உளறிக் கொண்டேயிருக்கின்றனர். என் அருமை சகோதரரே, அது எப்படி நிர்மூலமாகும் என்று நான் உங்களுக்கு எடுத்துக் கூறுகிறேன். இந்த உலகத்தை சிருஷ்டித்த அதே வார்த்தை - கர்த்தருடைய வார்த்தையினால் இந்த உலகம் சிருஷ்டிக்கப்பட்டது - கர்த்தருடைய வார்த்தையின் மூலமாகவே. இது இல்லாமல் போய்விடும். தேவன் இந்த பரிதபிக்கப்பட்ட, குருடான, நிர்ப்பாக்கிமுள்ள தேசத்தின் மேல் கிருபையாயிருப்பாராக! அது ஐசுவரியமுள்ளதாயும், திரவிய சம்பன்னனாயும் ஆகிவிட்டது, ஆனால் அது தேவனுடைய பார்வையில் நிர்வாணமாயிருந்து, அதை அறியாமலிருக்கிறது. என்ன ஒரு பரிதாபமான காட்சி! சோதோம் தேவனால் சிதைக்கப்படுவதற்கு முன்பு என்ன நடந்தென்று பார்ப்போம். சோதாம் அக்கினியால் அழிக்கப்பட்ட தையும், நோவாவின் காலத்தில் உலகமானது தண்ணீரினால் அழிக்கப்பட்டதையும் நீங்கள் காணவேண்டுமென்று விரும்புகிறேன். இவ்வுலகத்தை மறுபடியும் தண்ணீரினால் அழிப்பதில்லை என்று தேவன் மனிதனுடன் உடன்படிக்கை செய்து கொண்டார். ஆனால் அக்கினியைக் குறித்து அவர் மனிதனுடன் உடன்படிக்கை செய்து கொள்ளவில்லை. எனவே அவர் தம்முடைய வாக்குத்தத்தத்தை மீறாமல், உலகத்தை அக்கினியால் அழித்துப் போட முடியும். பேதுரு அப்போஸ்தலன் அதைக் கண்டு உரைத்திருக்கிறான், தேவன் சோதோமை அழிக்கும் முன்பு அவர் தமது தூதனை அனுப்பி ஆபிரகாமை எச்சரித்தார். ஏன்? ஏனெனில் ஆபிரகாம் வார்த்தையின்படி வாழ்ந்து, வார்த்தைக்குக் கீழ்படிந்து நடந்தான். அவ்விதமாகத்தான் தூதர்கள் மனிதரிடம் வருகின்றனர் - அவர்கள் வார்த்தைக்குக் கீழ்படிந்து நடக்கும் காரணத்தால். மூன்று தூதர் கள் ஆபிரகாமிடம் வந்து (அவன் தேவனுடைய தீர்க்கதரிசி) தேவன் சோதோமை அழிக்கப் போவதாக அவனிடம் கூறினர். இந்த மூன்று தூதர்களின் வருகையின் காரணத்தை கவனியுங்கள்அவர்கள் அழிவுக்கான கடைசி எச்சரிப்பின் செய்தியைக் கொண்டு வந்தனர். அந்த தூதர்கள் ஆபிரகாமின் இடத்தை விட்டு சோதோ முக்குச் சென்று, வரவிருக்கும் நியாயத்தீர்ப்பை அறிவித்தனர். அனால் சோதோமின் ஜனங்களோ அந்த தூதர்களைப் பார்த்து நகைத்து, அவர்களுக்கு தீங்கு செய்யவும் கூட முயன்றனர். இன்று உலகில் சபைகள் என்று அழைக்கப்படுகிறவைகளுக்கு இதை நான் ஒப்பிட விரும்புகிறேன். தேவனால் அனுப்பப்பட்ட ஒரு உண் மையான மனிதன் அவர்களுடைய நகரத்துக்கு வரும்போது, அவனை ஆதரித்து, அவனுக்கு துணை நின்று, செய்திக்கு செவி கொடுப்பதற்கு பதிலாக அவனுக்கு தீங்கிழைக்க முயல்கின்றனர். அவர்கள் அவ் விதமாகத்தான் இருப்பார்கள் என்று வேதம் உரைக்கிறது. கடைசி நாட்களைக் குறித்து வேதம் உரைக்கும்போது, "மனிதர் உலகப் பிரியராயும், துரோகிகளாகவும், துணிகரமுள்ளவர்களாயும், இறு மாப்புள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும் இருப் பார்கள்” என்கிறது. நீங்கள், "சகோ .பிரான் ஹாமே, இது கம்யூ னிஸ்டுகளைக் குறிக்கிறது" எனலாம். இல்லை, இவர்கள் கிறிஸ்த வர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்கிறவர்கள், இவர்கள் தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக் கிறவர்கள் - கடைசி கால செய்தியை மறுதலித்து, இயற்கைக்கு மேம்பட்டதை மறுதலித்து, அதற்கு செவி கொடுக்க மறுப்பவர்கள். ஓ, தேவனில் இளைப்பாறி, விசுவாசித்து, லோத்தையும் நோவாவையும் போல அதற்கான பலனைப் பெறுவது எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு செயல்! நமது விசுவாசத்தினால் தெரிந்து கொள்ளப்பட்டு, அவருடைய கிருபையினால் தப்பித்துக் கொள்ளுதல். அந்த ஜலப்பிரளயத்தைக் குறித்து இந்தவிதமாக நீங்கள் வேதத்தை படித்ததுண்டா ? பூமியில் ஒரு துளி மழை விழுவதற்கு முன்பு, நோவா பேழைக்குள் சென்றான். வானத்திலிருந்து ஒரு அக்கினி பந்து சோதோமின் மேல் விழுவதற்கு முன்பு, லோத்து சோதோமி லிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டான். நோவாவின் காலத்தில் நடந்தது போலவும், லோத்தின் நாட்களில் நடந்தது போலவும் மனுஷகுமாரன் வருங் காலத்தில் நடக்கும் என்று இயேசு உரைத்துள்ளார். சபையே, கையுறுப்பு சுவற்றில் தோன்றியிருக்கு மானால், சபை எடுத்துக் கொள்ளப்படுதல் எவ்வளவு அருகாமை யில் உள்ளது. அதை யோசித்துப் பாருங்கள். நோவா பாதுகாப்புக் கென பேழைக்குள் சென்றான். அதே காரணத்துக்காகத்தான் லோத்து சோதோமை விட்டு வெளியேறினான். ஒருவன் வெளி யேறினான். மற்றவன் உள்ளே பிரவேசித்தான். இது எதற்கு எடுத்துக் காட்டாயுள்ளது? நல்லது, என் இருயதத்தில் நான் இவ்விதமாக எண்ணுகிறேன். சபையானது பாதுகாப்புக்காக உலகத்தை விட்டு வெளியேறி, மகிமைக்கு பயணம் செய்வதற்கென கிறிஸ்து என்னும் பேழைக்குள் பிரவேசிப்பதற்கு இது அடையாளமாயுள்ளது. இதை ஞாபகம் கொள்ளுங்கள் - எகிப்தில் கல்மழையும், அந்த காரமும், மரணமும் நேரிடுவதற்கு முன்பு. வெளிச்சம் இருந்த கோசேன் நாட்டுக்கு இஸ்ரவேல் ஜனங்கள் சென்றடைந்தனர். மனிதரே ஸ்திரீகளே, நான் சொல்வதை இப்பொழுது கேளுங்கள் - அந்த நாள் வந்து நீங்கள் அந்தகாரத்திலும் நியாயத் தீர்ப்பிலும் இவ் வுலகில் விடப்படுவதற்கு முன்பு, பாதுகாப்பிற்கென உங்களால் முடிந்தவரை வேகமாக ஓடி பேழைக்குள் செல்லுங்கள். அவரு டைய இரக்கத்தின் செய்தியை ஏற்றுக்கொள்ளுங்கள். "நீ வேக மாக இங்கிருந்து தப்பி ஓடு. நீ வெளியேறும் வரைக்கும் என்னால் ஒன்றும் செய்ய முடியாது" என்று தூதன் கூறினான். அதுவரைக்கும் நியாயத் தீர்ப்பு வர முடியாது. ருஷியாவிடம் உள்ள ஏவுகணை நம்மை மரணப் படுக்கைக்கு கொண்டு சென்று விடும். தேசியப் பிரகாரமாகவும், ஆவிக்குரிய பிரகாரமாகவும் அது எதைக் குறித்து பேசுகிறது? இங்கு வா, நீ வேளியேறும் வரைக்கும் நான் ஒன்றும் செய்ய முயடியாது' என்று தேவன் தமது சபைக்கு கூறுகிறார். தேவன், தமது சபை அதன் ஸ்தாபன தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்துவிட்டு, ஒன்றுகூடி, பரிசுத்த ஆவியை அதன் மேல் பொழியச் செய்து அதை மகிமைக்கு எடுத்துச் செல்வதற்கென அவர் காத்திருக்கிறார். * நீ வெளியே வரும் வரைக்கும் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. உலகம் அழிந்து போவதற்கு முன்பு அவர் நம்மை எடுத்துக் கொள்வதற்கு, நாம் ஒன்று கூடி அவர் நம்மை ஒரே சரீரமாக இணைக்க வேண்டும். சபையே, அவர் இரக்கத்தில் உன்னை இன்று சந்தித்துக் கொண்டிருக்கிறார். அவர் உள்ள போதே, நீ செவி கொடுத்து அவருடைய செய்தியை ஏற்றுக்கொள். மனிதனால் உண்டாக்கப் பட்ட பாபிலோனின் ஸ்தாபன மதில்களை விட்டு விலகி அவரிடம் வா. மனிதனால் உண்டாக்கப்பட்ட வேத சாஸ்திரங்களையும் கோட் பாடுகளையும் விட்டு ஓடிப்போ , தேவனுடைய கிருபையின் நடுவில் ஓடி வந்து இரக்கத்துக்காக கூக்குரலிடு. ஏனெனில் அவருடைய குமாரனின் இரத்தமே உன்னை இரட்சிக்க முடியும். உன்னுடைய பழைய சந்தேக சுபாவத்திலிருந்தும் மூட பழக்கங்களையும் விட்டு விலகி, செவி கொடுத்து, அவருடைய கிருபையின் நடுவில் ஓடி வந்து பிழைத்துக் கொள். ஏனெனில் மனிதனால் உண்டாக்கப்பட்ட ஸ்தாபன மதில்கள் தூள்தூளாக உடைந்துபோய், ஸ்தாபனங்கள் அனைத்தும் அவிசுவாசிக்கும் உலகத்துடன் சேர்ந்து அழிவுக்குள் ளாகும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆனால் நீதிமானாகிய லோத்தும் நீதிமானாகிய நோவாவும் வெளியே கொண்டு வரப்பட்டது போல, ஜீவனுள்ள தேவனுடைய சபையும் வெளியே கொண்டு வரப்படும். நீங்கள் மட்டும் செவி கொடுப்பீர்களானால், ஒரு அணுகுண்டையும் கூட காண மாட்டீர்கள், அழிவின் ஆயுதம் ஒன்றுமே உங்களை அணுகாது. நீங்கள் தேவனுடைய மகத்தான ராஜ்யத்தில் பாதுகாப்பாயிருப்பீர்கள். உறங்கிக் கொண்டிருக்கும் ஸ்தாபன சபையில் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட அனைத்தினின்றும் உங்களை வெளியேற்றி, ஜீவிக்கிற அவருடைய ஆவியினால் உங்களைக் காத்துக் கொள்வதற்கென உங்களை வெளியே இழுக்க முயற்சிக் கும் தேவனுடைய ஆவியை உங்களால் உணர முடியவில்லையா? கர்த்தர் தோத்தரிக்கப்படுவாராக, அவர் நமது கண்களை திறந்து கொண்டிருக்கிறார். அன்புள்ள தேவனே, நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் உம்மிடம் வரும்போது எங்களை புதுப்பிப்பீராக! ஆமென்.